பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# $9


போக்கு சிவன் போக்கு ‘ என்கிற அவன் நிலையை மாமல்லன் உய்த்துணர்ந்தவன் அல்லவா ஆகவேதான், தேவைப்படும் சமயத்தில் பால் அருந்தச் சொன்னான். இரவுக்குள் அவன் அதைக் குடித்துவிடமாட்டானா, என்ன ?


திரிபுரம் எரித்த பின்னர்தான் விரிசடைக் கடவுள் சிரித்தானாம், ஆனால் இதோ, அந்த ஈசனையும் தோற் கடிக்கச் செய்துவிட்டவனைப்போல மாமல்லன் அட்டகாச மாகச் சிரிக்கின்றானே, ஏன் ? இவன் எதை எரித்தான் ? யாரை எரித்தான்...?


கொட்டாவி பறிந்தது. உடலை தெளித்தான். கைகளை உதறினான், எழுந்தான். மேகலை கண் வளர்ந்து கொண்டிருந்த காட்சி அவன் கருத்தில் அகத்துறையை நினைவு கொள்ளத் துரண்டிற்று. ஆனால் அவன் அந்தக் காட்சியைத் தன் கருத்தை விட்டு விலக்கி விட முயற்சி செய்தாள். குலோத்துங்கனை நோக்கினான். அவனிட மிருந்து குறட்டை ஒலி மட்டும் வெளியேறிக் கொண்டிருந் தது. தன்னுடைய திட்டத்தையும் பரீட்சையையும் மறுபடி மனத்திற்குள் உரைத்துப் பார்த்தான். பிறகு படுக்கையில் வீழ்ந்து தூங்குவது போன்து பாசாங்கு செய்தான்.


இமையுடன் இமை பொருதவில்லை. மாமல்லன் புரண்டு படுத்தான். அரவம் ஒன்று கேட்கவே, விழிகளை மெதுவாகப் பிரித்தான். குலோத்துங்கன் எழுந்து உட்கார்ந்தவன், மறுகணமே படுத்துவிட்டான். முன்போல குறட்டை சுருதி சேர்க்கத் தொடங்கியது. குலோத்துங் கனுக்குக்காக காத்திருந்தது பால் குவளை. அவனை எழுப்பிக் குடிக்கச் சொன்னால் ....? வேண்டாம் ‘, மாமல்லவி எழுந்து கூடத்துக்கு நடந்தான்.


விழிப் பார்வை மூடியபோது, செவிப்புலன் விழித்தது “டங்க் !’ என்ற சத்தம் துளைத்தது.