பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5


மாடியில் நின்று பார்த்தபோது லிங்கச் செட்டித் தெரு கூட எழில் பூத்துத்தோன்றியது. திக்கெட்டும் பார்வையை வலை வீசினான். வாணை அளைந்த ஆழி தென்பட்டது. கடற்கரையில் மின்சார வண்டியொன்று அப்போதுதான் வந்து நின்றது. என்னவோ எண்ணினான் என்னவோ தோன்றியது. கண்ணில் தெரிந்த தோற்றத்தில் வருங் காலம் என்ற குறிப்பு காணப்பட்டது. அது அழகுடன் விணங்கியது. நிகழ்கால நினைவுகளுக்கும் எதிர்கால நடப்புக்கும் பாலம் சமைத்துக் கொடுக்கும் சக்தி இந்த மனத்துக்கு இல்லையென்றால், அப்பால் வாழ்க்கை வாழ்க்கையாகவா இருக்கும் வேண்டாம், வேண்டவே வேண்டாம் பெல்லாத அந்தச் சிந்தனை :


சிலப்பதிகாரத் தம்பதிகளின் நினைவு முகங்கள் மனத் திரையைக் கிழித்துக் கொண்டு தெரிந்தன. அந்த இரு உருவங்களுக்கு மத்தியில் வேறு புதிய இரண்டு முகங்கள் தோன்றின. அவனுக்கு உச்சி குளிர்ந்தது, உள்ளம் குளிர்ந்தது. ‘மேகலையையும் என்னையும் திருமணக் கோலத்தில் கண்டு, எங்களை ஆசிர்வதித்து ஆரத்தி சுற்றப் போகும் தம்மாவின் சந்தோஷத்துக்கு எப்படி அளவு சொல்ல முடியும் ,என்று என்ன மிட்ட அவன் குறிச்சியில் வந்தார்த்தான், பூப்படுக்கையில் குந்தியது போலவே உணரலானான். மனம் கொண்டது மாளிகை.


மாமன் மகளே மரகதச் சிலையே! மருக்கொழுந்தே என்று சன்னக் குரலில் பாட்டின் இழைகளைப் பின்னினான் மாமல்லன். சிரிப்பு வந்தது. காட்டுக் கொன்து மேட்டுக் கொன்றாகச் சிதறிக் கிடந்த சிந்தனைச் சித்திரங்கள் அவனை வருந்தி வருந்தி அழைத்தன. கலை பெரிது, வயிறு சிறிது. கலையையும் வயிற்றையும் ஒன்று சேர்த்துப் பினைத்த சிந்தனையாளர்களுடன்தான் அவன் ஓய்வுப் பகுதியின் பெரும் பொழுதைக் கழிப்பது வழக்கம். இயந்