பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52


மாமல்லனுக்கு நெஞ்சை அடைத்தது ரத்த அழுத்தம் ஏற்பட்டுவிட்ட பாங்கிலே அவன் அரைக்கணம் நிலை மயங்கி உட்கார்ந்தான் நேற்று இரவு அத்தான் !’ என்று விளித்து ஓடி வந்ததன் இல்லக்கிழத்தியின் நினைவு வந்தது. “நீங்க திடீர்னு படுக்கையை விட்டு எழுந்ததுக் கும் கீழே கொட்டிப்போன பாலைக் குடிச்ச பூனை செத்துச் சிவலோகம் போனதுக்கும் எந்தத் தொடர்ச்சியும் இல்லேதான், ஆனாலும், மனசு என்னமோ படபடத்துச்சு’ என்று அவள் பதறியதை அவன் மறக்கமாட்டான். மங்கலமென்பது மனைமாட்சி என்னும் தமிழ்ச் சாதி மறையை அவளும் படித்தவள் !


சிந்தாமணியும் மாமல்லனும் குசலம் விசாரித்துக் கொண்டனர். பிறகு அவள் தன் அத்தானைப் பற்றிக் கேட்டாள். குலோததுங்கன் தனக்குக் கிறுக்கி வைத்துச் சென்ற கடிதத்தை குட்பைக் கூடையில் கசக்கி வீசினான் அவன : இப்போது அந்தப் பேதை நெஞ்சத்தை பேயாக ஆட்டி வைப்பவன் போல, எங்கே சென்றாரோ தெரிய வில்லையே’ என்று தொட்டும் தொடாமலும் விடை பகர்த்தான்.


“வாங்க சிந்தாமணி. உங்க அத்தானை எங்கிருந் தாலும் நான் தேடிக் கண்டுபிடித்துத் தருகிறேன !” என்றாள் மேகலை. இருவரும் சமையற கட்டில் இருக்கை யில் உரையாடல் ஆரம்பமானது.


“எப்படி முடியும்? நீங்க பெண் ஆயிற்றே...? ” ‘அதனால்தான் அவ்வளவு துணிச்சலோடு சொல் கிறேன்!”


‘அண்ணி, வேண்டாம் அதுவும் நீங்கள் என் அத்தானைத் தேடிக் கண்டு பிடிக்கும் வேலையை ஏற்கவே வேணாம்.’


“ஏனாம் ?’’