155
போது குலோத்துங்கன் அல்லவா பிரசன்னமாயிருக்க வேண்டும். அவன் எங்கு சென்றிருப்பான் ?...
திருமண் அழைப்பு ஒன்று இருந்தது. அதை எடுத்துப் புரட்டினான் மாமல்லன். சித்திரப் பாலடை ஒன்றும் அவன் கண்களில்பட்டது. புதுமணத் தம்பதிகளுக்கு அவன் கொடுக்க எண்ணியிருக்கும் பரிசில் அதுதான் !
உடுத்து முடித்து, சீவிச் சிங்காரித்துக் கொண்டு மேகலையும், சிந்தாமணியும் வந்து நிற்பதற்கும் வாசலில் பழி கிடந்த டாக்ஸி டிரைவா ஒலி எழுப்பி நினைவுக் குறிப்பைத் தொட்டுக் காட்டுவதற்கும் சொல்லி வைத்த மாதிரி கணக்காக இருந்தது.
மாமல்லன் வெய்துயிர்ப்பை வெளியிட்டான்.
‘வாங்க அத்தான் . நேரமாகல்லே’ நாற்பது நிமிஷங் களை நறுவிசாக எடுத்துக் கொண்டவள் எவ்வளவு நாகுக் காகப் பேசித் தப்பிக்க பார்க்கிறாள் எ ன் ப ைத எடை போட்டுங்கூடவா அவன் அசட்டையாகச் சிரித்தான் ?
“உன் முகத்திலே தெளிவைக் காண முடியலையே,
சிந்தாமணி ?’ வருந்தியது மனிதப் பண்பு. உறைந்திருந்த இடம், மாமல்லனின் இதயம்.
ஆறுதல் மொழி கேட்டதும், அடங்கிக் கிடந்த ஆறாத் துயரம் பீறிட்டுக் கிளம்பியது “அண்ணா, உங்களைத் தான் நம்பியிருக்கேன், நீங்க தான் என் அத்தானைக் கண்டு பி டி தி து தரவேணும்.’’ என்று விம்மினாள் சிந்தாமணி.
பொங்கி வரும் காவிரியின் புதுப்புணலை மாமல்லன் அனுபவிப்பதில் கைதேர்ந்தவன். ஆனால் பொங்கிவரும் கண்ணிரைக் கண்டால் அவன் கோழையாகி விடுவான்.