157
கல்யாணப் பெண் என் கணவருக்குக் கிட்டத்துச் சொந்தம். அவருக்கு உடம்பு சரியில்லை, வரமுடியவில்லை.
கைவரப் பெற்ற பெரிய சித்திரக்காரன் வரைந்த ரதியின் படத்தை இமைக்காமல் பார்க்கும் பாமரனைப் போல அவன் மாதவியைப் பார்வையிட்டான் ஐந்தாவது பாரத்தில் ஒன்றாகப் படித்தவள். அதற்குள் எப்படி குடியும் குடித்தனமும் பிள்ளையும் குட்டியுமாக ஆகி விட்டாள் ‘ சரஸ்மாகப் பேசிய பாவனையை எண்ணினான். அவளை மறுபடியும் பார்த்தபொழுது அவனைப் பார்த்தது அவளது கைக்குழந்தை. அது அவனிடம் தாவியது. அவன் பிள்ளைக் கனியைக் கை நீட்டி வாங்கியபோது, மாமல்லனின் வலது கைவிரல்கள் மாதவியின் தாலிச் சரட்டில் பட்டு விலகின, மின் அதிர்ச்சி அடைந்தவனாகத் திணறினான். மேகலையின் கண்கள் தன் மீது பதிந் திருந்ததைக் கவனித்த அவனுக்குச் சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டன. -
பேசும் பொற்சித்திரத்தை வாங்கி ஆயிரம் முத்தங்கள் பதித்தாள். மேகலை, தன்னைப்பற்றி எண்ணியதும், தன் வயிற்றுக் குழந்தை சிரிக்க ஆரம்பித்தது, இன்னும் கொஞ்ச நாட்கள் கழிந்து போனால், என் கவலைகளையெல்லாம் மறக்கடித்து விடும் என்னுடைய குழந்தை.
ஊருக்குப் புறப்படுவதற்கு முன் தன் வீட்டில் ஒரு வேளை விருந்து உண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டாள் மேகலை மாதவியும் சம்மதம் கொடுத்தாள், சிந்தாமணியும் மாதவியுடன் சிறுபொழுது உரையாடினாள்,
இரவு படுக்கையில் சாய்ந்திருந்த மாமல்லன் பாரதியின் பாடல்களைப் புரட்டினான், தின்ன வரும் புலியானாலும் கூட அதைச் சிந்தையிலேற்றி அன்பு பாராட்ட வேண்டும்!” என்று உபதேசம் செய்திருந்ததைப் படித்தபோது.