பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158குலோத்துங்கன்தான் நெஞ்சடியிலிருந்து எழும்பினான். குலோத்துங்கனும் மேகலையும் சிறு வயதில் ஒன்றாக இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் நினைவுக்கு வந்தது, பதறினான். முதல் சலனம் அதுதான் ! .மாதவியும் தானும் இருந்த நிழற்படத்தை ஒரு சமயம் மேகலை நீட்டிய சம்பவத்தையும் எண்ணத் தொடங்கினான். கனவில் கண்ட மாதவியின் எழில் அவனுள் சலனம் உண்டாக்கியது, புலனடக்கத்தை அவன் பழகவில்லை. ஆகவே, மேகலையைத் தேடிச் சென்றான். அவள் நிலை மறந்த தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அவளருகில் நடந்து சென்றபோது, அவளது அறையில் ஒரு பிரயாணப்பை இருந்ததைக் கண்டான், குலோத்துங்கனின் பெயர்ச்சீட்டு காணப்பட்டது. அவசரம் அவசரமாக அதைப் பிரித்தான் மாமல்லன்.


பாம்பின் வாய்க்குள் கையை நுழைத்து விட்டானோ?... இமைச் சிறகுகள் கண்மூடிக் கண் திறந்தன. வெறும் கந்தலும் கிழிசலுமாக இடத்தை அடைத்துக்கிடந்த துணிமணிகனை எடுத்து ஆத்திரத்துடன் தூர வீசி எறிந்தான் மாமல்லன். பிறகு, அப்பகுதியில் அவன் விழிகள் ஊர்ந்தன. பத்து ரூபாய்த்தாள் கட்டுக்கள் பல இருந்தன நாட் குறிப்பு ஒன்று கிடைத்தது புகைப் படங்களை அடக்கிக் கொண்ட பெரிய உறை ஒன்றும் தென்பட்டது !