பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


“நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு, அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் p’


வெறுங் காகிதக் கற்றைகளில் நாணய மதிப்பை உள்ளடக்கிக் கொண்டிருந்த பத்து ரூபாய்த் தாள்கள் அவனுடைய கண்ணிர்த் துளிகளை ஏந்திக் கொண்டன. பிரிந்த நாட் குறிப்பின் ஏடுகள் விறந்த நன்முத்துக்களைச் சேகரம் செய்தன. உறை உதறிய நிழற்படங்களில் அங்கங்கே சொட்டு நீர் முத்திரை பதித்தது.


மாமல்லன் விம்மினான், விம்மல் வெடித்தது. விம்மல் வெடிப்பதைப்போல என் நெஞ்சும் வெடித்து விட்டால், நஞ்செனப் பரவி மண்டை கொண்டு விட்டிருக்கும் சஞ்சலம் என்னுடனேயே அழிந்து விடுமே !’ என்னும் நினைவு சுய உருக்கொண்டு எழுத்தது. அவன் இப்போது


வாய்விட்டு அழுதான், மேகலை, நீ ஏன் இப்படி என்னைச் சித்திரவதைப்படுத்துகிறாய்?” என்று கேட்டான்.


“அத்தான்’.


மேகலை படுக்கையைவிட்டு எழுந்தாள், தோன்றினாள் வினா அனுப்பிய வாய்க்கு விடை கொடுக்க வந்திருக் கின்றனளோ ?