பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7



திரங்கள் உறவாடும் ஆங்கிலக் கம்பெனி அவனுடைய வயிறு நிறைய வாழ்வு தந்தது. அது அவனது இயந்திர வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஆனால் அவன் மனம் ஒன்றியது இலக்கியத்தில்தான். கிழக்கு ங் மேற்கும் சந்திக்கும்-அல்லது பிரியும் இடத்தில் அவன் அண்டினான், ஒண்டினான். சங்கீதக் கச்சேரியில், சலனப் படத்தில் காணாத தனித்த இன்ப உணர்வை அவன் இலக்கிய உலக யாத்திரையில் அடைந்தான்.


விரிந்து கிடந்த புத்தகங்களிலிருந்து விலகிப்பிரிந்து கிடந்தது ஒரு செய்தித்தாள். கல்கித் தமிழ்’ என்னும் அடைமொழியைத் தமிழுக்கு அளித்தது. தன் பெயருக்கு இலக்கிய உலகத்திலே சிரஞ்சீவித் தன்மை கொடுத்து விட்டு, அமரராகக் காட்சியளித்துக் கொண்டிருந்தார் பேராசிரியர். அவனது தேத்திரங்கள் நித்திலங்கள் சொரிந்தன. அவ்வுருவுக்கு அஞ்சலி செய்தது அவனுடைய இலக்கிய நெஞ்சம்


--س۔-م


ஊதுவத்தியைக் கொலுத்தினான் மாமல்லன். சற்று முன் மருக்கொழுந்து என்ற சொல்லடுக்கை எண்ணியதும் அவனுக்கு மேகலையின் ஆசை முகம் ஒடி வந்தாற் போலவே, இப்போது ஊதுவத்தியின் நறுமணமும் அதே மேகலையை நினைவுறுத்தியது. நினைவுகள் இயற்கை வர்ணச் சலனப் படம் போன்றவை. அவை உருவாக்கும் கனவுகள் எழில் மிக்கவை ஏற்றம் புரிபவை.; அந்தம் மிகுந்த அந்த நினைவுகள் வாழவேண்டும்; அப்போதுதான் மனிதன் மனிதனாக வாழ முடியும் !


ஐந்து வயதிலே, அறியாப் பருவத்திலே முளை விடும் பாசத்தைப் பகைப் புலனாக்கி, சிறுவர் சிறுமியரின் கதை வருணிக்கப்படுவது உண்டல்லவா ? அம் மாதிரியல்ல, மேகலை-மாமல்லன் கதை அதைவிடப் பான்மை யுடையது இது பண்பு சார்ந்தது. மாமல்லன் பிறந்தான்.