பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j62


“என் வாழ்க்கைக் கூத்தின் தோல்வியில் விளைந்த இதய ஒலி அத்தான், இது !’


மேகலை, நான் அல்லவா தோல்வியின் பாதத்தில் தேய்ந்து உள்ளம் மறுகிக் கொண்டிருக்கிறேன் ! நீ புதிர் போடுகிறாயே!”


அத்தான், நானா புதிர் போடுகிறேன் ? பெண்ணைப் புதிரென்று சொல்வதிலே இன்பம் காணும் கதைகள் உங்களுக்கும் பாடம் போதித் திருக்கின்றன ! .


‘இனி அவற்றை நான் மறந்து விடுகிறேன். ஏனென் றால் நீ தான் எனக்கு அமைச்சராக வாய்க்கப் போகி றாயே அத்துடன் ஆசிரியையாகவும் மாறி விடு.


“ஆம், நல்லதுதான், அப்படித்தான் புது மனைவி


வேண்டும். ஏனென்றால், என் மாங்கல்யத்தைக் காப்பாற்றி


என் கனவுக் குழவியைப் பெற்றுப் போற்றவும் முடியும்.


“என் பேச்சு எனக்கு மட்டும் படவில்லை, மேகலை.


‘உங்கள் நடத்தை கடந்த சில மாதங்களாக எனக்கு


மட்டுப் படாமல் இருக்கிறதே, அத்தான்”


“வேடிக்கையான பெண் நீ”


வேடிக்கைப் பொருளானதால் தான், பேசாமல்


கொள்ளாமல் என்னை ஆட்டிப் படைத்து வருகிறீர்கள்’


‘போதும், நிறுத்து என்னைச் சித்திரவதைப் படுத்தாதே இரவுப் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்போம்.


எழுந்திரு கண்ண்ே”


பகற்பொழுதைச் சவக்கிடங்காக்கிக் கழித்தேனே கழிந்த பல நாட்களாக, அதற்கு யார் பரிகாரம் செய்வது?”


‘தவறு என் மீதிருந்தால், உன் மீது ஆணையாக நான் பரிகாரம் செய்வேன்’ .