பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#67


“ஏங்க : சீதாப்பிராட்டியார் தன் கற்பு நெறியை ருசுபிக்க நடத்திக் காட்டின தீக்குளியைப் பத்தி உங்களுக்கு என்ன அபிப்பிராயம்.’


“அதைப் பத்தி இப்போ என்ன பேச்சு?” ‘சும்மா சொல்லுங்களேன்’


“ஊர் உலகத்துக்குத் தன் தூய்மையைக் காட்டத்தான் தீக்குளி நிகழ்ச்சியை தசரதகுமாரன் உண்டாக்கவேண்டி வந்தது’


‘ஒஹோ !”


‘மேகலை, இப்போது உனக்கு ஏன் இந்த ஞாபகம் ...?’


“என்னமோ ஞாபகம் வந்துச்சு, எ ன் ன ேம ா கேட்டேன்’


“சரி, நான் உன் கிட்டே இரண்டொரு விஷயங்களைக் கேட்டு தெரிஞ்சுக்கலாமா, மேகலை?”


“அத்தான், உங்களுடைய குழந் தையை உங்கள் கையில் ஒப்படைக்கும் மட்டும் என்னை நிம்மதியாக இருக்க அனுமதியுங்கள் என்னை நம்புவதாக நீங்கள் இதயம் உணர்ந்து சொன்னது ஒன்றே எனக்கு நிம்மதி யளித்து விடும். நான் பாக்கியவதி; அத்தான், பாக்கியவதி! அம்பிகையை நம்பினேன், சரணடைந்தேன். நான், கேட்ட வரம் தந்து விட்டாள்.’


“மேகலை. என் அன்பே ஆருயிரே ...’ மாமல்லனின் காற்பாதங்களில் இமைப்பனி திரை மறித்தது.


‘அண்ணா என்று உரிமைப் பாராட்டி வந்தாள் சிந்தாமணி,