பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§


என்றவள் ஈசனுக்கு வந்தனை செலுத்தினாள், அத்துடன் வேறொரு புதிய கவலையும் அவளை ஆட் கொண்டது. எங்க அண்ணிக்குப் பிறக்கிறது பொண்ணாகயிருக்க வேனும், அப்பத்தான் எனக்கு மருமகள் கிடைக்கும். ரத்த பாசமும் விடாமல் இருக்கும், என்று நினைத்தாள். அவள் எண்ணியதையே அவனும்’ என் சிைனான்” மாணிக்கத் தொட்டில்கள் இல்லை, மரத் தொட்டில்களிலே மாணிக்கக் கட்டிகள் இரண்டு புருவம் பிரித்து, புன்னகை சிந்தி, புத்துயிர் அளித்தன.


‘எனக்கு மருமகள் கிடைச்சுட்டுது,” என்று ஆனந்தக் கூத்தாடினார். கோசலையும் அவளைக் கொண் டவரும். கோசலையின் தமையனார் சோம சுந்தரமும் அவர் மனையாட்டி மரகதவல்லி அம்மையும் சம்மதம் தெரி வித்தார்கள்.


மாமல்லன் நல்ல மூச்சு விட்டான். தாய் சொல் மிக்க தொரு மந்திர மில்லை. அன்னை வடிவம் அன்பு வடிவம், அருள் வடிவம்.


மேகலை !’


உரிமை அழைத்தது.


அத்தான் !’


‘உரிமை பதில் சொன்னது.


கல்லூரியில் பாடம் கேட்ட கம்பர் சித்திரம் ஒன்று இதயத்தில் அழகு காட்டிற்று, மிதிலைச் செல்வி புனையா ஒவியம்’ எனப் பேசப் படுகின்றாள். அந்தச் சொற் றொடரை மேகலைக்குக் கொடுக்க வேண்டு மென்று ஆசைப் பட்டான் அவன். ஆசைக்கு வெற்றி கிடைத்தது.