பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


172


கள்: டைரி, புகைப் படங்களைக் கொண்ட உறை தாம் அவளுக்கு முன்னிலையிலும் காணப்பட்டன.


மேகலையின் உடல் பதறவில்லை, அவள் மனம் சிதற வில்லை. சலவைத் தாள்களான ரூபாய் நோட்டுக்கள் புறப்பட்ட இடத்தை அவள் அறிந்தாள். திருமாறனின் கடிதம் அதற்கு உதவியது. முதன் முதலில் - அதாவது, தனக்கென தன் தந்தையால் திருமாறன் நிர்ணயம் செய்யப் பட்டிருந்த சமயத்தில் அவன் மீது அடங்காத ஆத்திரம் வைத்திருந்தாள் ஆனால் அந்த ஆத்திரம் பிறகு அனு தாபமாக மாறியது ஒட்டிய உள்ளங்களின் பூர்வ கதை யைக் கேள்விப்பட்டவுடன், கண்ணியத்துடன் ஒதுங்கி பண்புடனும் பாசத்துடனும் நடந்த அவனுக்கு அவள் கருத்


தில் உயர்ந்த இடம் அமைந்தது. இன்னமும் பணம் கொடுக்கிறேன். ஒடிவாருங்கள் !’ என்ற திருமாறனின்


கடிதக் குறிப்பு அவளுடைய மனத்தில் மாற்றத்தை உண்டு பண்ணியது. தமிழ்ப்பண்பை அழிக்க இவர் பணத்தை ஏவிவிட்டிருக்கிறாரே....!” என்று வருந்தினாள். ‘ஒரு வேளை இக்கடிதத்தில் ஏதாகிலும் தப்புத் தவறு ஏற் பட்டிருக்குமோ, அத்தான்!” என்று மாமல்லனிடம் அவள் வினவியதற்கு, இது திருமாறன் கையெழுத்துத்தான், நான் நேரில் சென்று அவனைச் சந்திக்கிறேன்’ என்று பதிலளித்தான்.


ஒருநாள் கங்குல் மனை மிதித்த நேரத்தில், கோசலை அம்மாள், சிந்தாமணி, மேகலை மூவரும் வெளித்திண்ணை யில் உட்கார்ந்திருந்தார்கள். சிந்தாமணியின் முகம் சாம்பிப்போயிருந்தது, மேகலை, ஒரு காலத்தில் உன்னைப் பெரிய இடத்து மருமகளாக ஆக்க உன் அப்பா ஏற்பாடு செஞ்சிருக்கையிலே, சிந்தாமணிதான் உன் இடத்தை இட்டு நிரப்பப் போகுதுன்னு நான் மனசிலே நினைச்சு ஆறுதல்பட்டேன். எனக்கு எப்படி யெப்படி யெல்லாமோ தேறுதல் சொன்னிச்சு இது. ஆனா, இப்ப இதுக்கு என்ன சொல்லி எப்படி அமைதிப்படுத்துகிறது