பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#74


திருச்சியில் பிறந்து வளர்ந்த குலோத்துங்கனின் பிஞ்சுப் பிராயத்தை அரியலூர் வளர்த்தது. ஏனென்றால், அவள் தாய் தந்தையர் அங்கேதான் வயிற்றுப் பிழைப்புக்கு ஒதுங்கினார்கள். அப்போது குலோத்துங்கனும் மேகலையும் ஒடிப்பிடித்து விளையாடினார்கள். ஒரே வட்டிலில் உணவு கொண்ட இடைப்பொழுதும் இருந்தது. ‘என் ஆசை அத்தான் ஒருவரைப் பற்றியே சதா நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு மற்றவர்களைப் பற்றிய ஞாபகம் என் நெஞ்சில் எப்படி நிலைக்க முடியும் ?- அதனால் தான் அவளாகவே இந்தப் போட்டோவைப்பற்றி முன்பு மாமல்லனிடம் பிரஸ்தாபித்தாள்.


அடுத்த உருவப் படம் விரலிடுக்கில் ஆடியது பஞ்சணை மெத்தையில் சாய்ந்து பால்வண்ண நிலவொளியில் மிதந்து கொண்டிருந்தாள் மேகலை வேறொன்று : குளிக்கும் அறையைவிட்டு வெளியேறிய நிலை. விற்புருவங்களிடையே மானின் மயக்கம் : தாமரை முகத்தில் இளமைப் பருவ எழிற் சேர்க்கையின் செவ்வரிகள் ; உதடுகளிலே போதை யூட்டும் பாவனை, மாங்கல்யம்.சரண் புகுந்த இடத்தில் மாண்புகொண்ட தமிழ்ப்பண்பு இளநகை புரிந்தது. மேகலைக்குத் தன் படத்தைப் பார்த்தபோது என்னவோ செய்தது. வீசினாள். மற்ற படங்களை நடுங்கும் கைகளால் அள்ளினான். எல்லாம் மேகலையின் பல்வேறு கோணப் படங்கள்தாம் !


உதிரத் துளிகளை மனக்கண் உதிர்த்துக் கொண்டே யிருந்தது.


நாட் குறிப்பின் இதழ்கள் விலகின.


“ஐயோ! மேகலை மாற்றான் மனையாட்டியாயிற்றே”... அவள் நினைவில் மனம் பேதலித்துத் திரிவது பெரிய தவறு, தெய்வமே, மனத்தால் பிற பெண்டிரை நினைத்தால்