பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$82


“யாருடைய படம் இது ?” ‘உம் உங்களுடையதுதான், மேகலை !”


“சரி இப்போது என்னைப் பாருங்கள் குலோத்துங்கன்!”


குலோத்துங்கன் விழிகளை விலக்கிப் பார்வையைச் செலுத்தினான்.


தாய்மைக் கோலம் திகழ, தாய்மை கொடுத்த புத் தெழில் நெஞ்சகத்தை விம்மச் செய்ய, தூய்மைப் புன்னகை கொண்டு மனச் செம்மை ஒளிவிட சத்தியத்தின் ஒருருவாய் மேவுகடலின் வெண்ணிலவாய் நின்றாள். மேகலை. அவளுடைய கண்கள் வடித்த கண்ணிர் குலோத்துங்கனின் பாதங்களைத் தொட்டது


குலோத்துங்கனின் விழித்த கண்கள் விழித்தவாறே விளங்கின. மறுகணம் அவன் நிலை குப்புற வீழ்ந்தான். தலையை தரையில் மடார் மடா ரென்று அடித்துக் கொண்டான். அவன் வைத்த காணிக்கை மேகலையின் கால் விரல்களை ஈரமாக்கி கொண்டிருந்தது. செந்நிலம் மனம் திறந்து சிரித்தது பண்பு மிளிரச் செய்தது.


மேகலை மேகலை ! ’’


குலோத்துங்கனிடம் அடைக்கலப் பொருளாக இயங்கில புகைப்படங்கள், டைரி முதலியன அடுத்த இரண்டாவது வினாடியில் தீயில் குளித்தன.


இரண்டாவது பிறவி எடுத்தான் குலோத்துங்கன். பண்ணிய பாவங்களை அனைத்தும் பரிதி முன் பணியாக மறைந்தன. அன்னை அருள் இது.


தி ரு ம | ற ன் முன் நின்று, சிந்தாமணிக்கும் குலோத்துங்கனுக்கும் திருமணம் செய்து வைக்கத் திட்ட மிட்டான். அழைப்புகள் தயாராயின. -