பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it}


அன்பு சேர் மேகலை.


உன்னை இப்படித் தான் எனக்கு அழைக்கத் தெரி கிறது. ஆணிப் பொன் என்று விளிக் கட்டுமா ? மாற்றறிய பயன்படும் உயர்ந்த ரகத் தங்கம்தான் ஆணிப் பொன். என்னை நான் உணர உபயோகப்படும் பசும்


பொன் ஆயிற்றே நீ !


சென்னையும் அரியலூரும் இத்தனை நாட்கள் கனவு ள் மூலம் பேசிக்கொண்டன. இனி என் மேகலையும் உன் மாமல்லனும் நேருக்கு நேர் பேசப் போகிறார் கள்...! அழகின் ஆதரிசப் பொருளல்லவா நீ அன்பிற்குப் பொழிப்புரை பல்லவா உன் நெஞ்சம் ! எல்லையற்ற பேரழகு நீ எங்கும் நிறைந்த பொற் சுடர் நீ !


அத்தான் என்ற முத்துச் சொல்லைச் சத்தான தொனி யில் சொடுக்கிவிட வேளை பார்த்துக் கொண்டிரு


கிட்டத் தட்ட ஓராண்டுக்கு முன்னர் எழுதிய கடிதம் இது. இன்னமும் அது வைத்த இடத்திலேயே தான் இருக்கிறது. இதை மாமா பார்த்து விட்டால் ‘ என்ற அச்சம் அவனுக்குக் கை கட்டிச் சேவகம் செய்தது என்றாலும், இதைப் பார் தி து க் கொண்டிருப்பது: மேகலையைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒர் இன்ப உணர்வைத் தட்டிக் கொடுத்தது- இத்தனை நாட் களாக, மாதங்களாக!


பத்திரிகையை அப்படியே மூடி மேஜையில் வீசினான் வீசின. அவசரத்தில் மேற்படி பத்திரிகை மட்டும் கீழே சரணடைய வில்லை : கூட ஒரு புகைப் படமும் விழுந்தது.


“சிந்தாமணியின் போட்டோ இங்கே எப்படி வந்தது ? ஏன் வந்தது ? என்று தனக்குத் தானே வினா விடுத்தான் ம: மல்லன். அவனுக்குப் பதில் சொல்ல விண்ணிடை அெண்மதிக்குப் பேசத் தெரியாதே, பாவம் , !