பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21விளைவு, வெற்றி. ஆகவே, மனிதனின் தெய்வம் சிரிப்பை நிறுத்தாமல் தெய்வத் திருப்பணியினைத் தொடர்கின்றது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது !


இது வாழ்க்கை !


மாமல்லன் விம்மினான், பொருமினான், அழுதான், அலறினான். துடித்தான்.


‘தம்பி, அழாதேப்பா , ‘


அழவேண்டாமென்று வேண்டியவள் அழுதாள். பெற்ற மகன் சிரிப்பதைக் கண் பூத்துப் போகுமட்டும் பார்க்க வேண்டுமென்று காத்திருந்தவள் அழுதாள், பெயர் சொல்லப் பிறந்தவனை ஒரு வினாடிகூட கண்கலங்க வைக்கக் கூடாதென்று எண்ணமிட்டு, தன் கண் ணிரைக் காணிக்கை வைத்து ஈசனிடம் பிரார்த்தித்துக் கொண்டவள் அழுதாள், அழுதாள்.


கோசலை அம்மாள் கண்களைத் துடைத்தவாறு மாமல்லனை நோக்கி. ‘தம்பி, நடந்ததை மறந்திடு, மாமல்லா !” என்று கெஞ்சினாள்.


‘அம்மா அம்மா!... எதை மறந்து விடச்சொல் lங்க மாமன் மகள் மேகலையையா? அல்லது, மாமன் மகளோடு பாசமும் நேசமுமாகப் பழகினதையா? எதை அம்மா மறந்திடச் சொல்றீங்க ?. சொல்லுங்கம்மா மறந்திடு றேன்!”


மாமல்லா என்னென்னவோ பேசிறியே? என்ன பதில் சொல்றதின்ணே ஒண்னும் மட்டுப் படலையே, தம்பி!’


மாமல்லனும் கோசலையும் விம்மல் நிறுத்தவில்லை. மேகத்துண்டங்கள் நெட்டித் தள்ளிய நிலாக்கீற்று அள்ளிச் சொறிந்த வண்ணப் பொடியைக் காலால் எட்டி மிதித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். .” *.