பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22முல்லை நகைபுரியும் நிலவுக் கன்னிகையைப் பற்றற்ற இதயத்துடன் அனுபவிக்கும் தவ முனியின் நிலையில் இருந்தான் மாமல்லன். இதே நிலா மாளிகையில் மேகலையை அமர்த்தி எத்தனையோ தடவை அழகு பார்த்திருக்கிறான் இதே மாமல்லன். ஆனால், இன்றோ அந்த மே கலையை எட்டாத தூரத்திற்குப் பிரிக்கப்பட்டு விட்டாள், ஒட்டாத உறவுக்கு ஒதுங்கிச் சென்று விட்டாள் உரிமையையும் உறவையும் துண்டித்து விட்டது. எது? அவனுடையஊழ்வினையா ? விதியா ? இல்லை ...!


  • அம்மா, நம்ப மேகலையை உங்க மேகலையை நான் ஒரு தரம்- ஒரே ஒரு தரம் மாத்திரம் பார்த்திட்டு திரும்பிடறேன் இன்னிக்கு ராத்திரிக்கே அரியலூருக்குப் போய் வரடடுமா, அம்மா’


‘உங்க இரண்டு பேர் ஜாதகமும் எப்போ பொருந்தலையோ, அப்பவே நீ மேகலையை மறந்திடத் தான் பிரயத்தனப்படனும். இனிமேல் மேகலை யாரோ, நாம யாரோ என்ன செய்யறது ?. கோட்டையிலே பிறத்தாலும் போட்ட புள்ளி தப்பியா போயிடும்? எங்க அண்ணா எழுதியிருந்த கடுதாசியை நீ தான் படிச்சுப் பார்த்தியே ? ... அவங்களும் நம்பளைப் போல வருத்தப் படத்தான் செய்வாங்க பாவம் பொண்ணுந் தான் புழுவாத் துடிச்சுக்கிட்டிருக்கும் எப்பவோ ஆண்டவன் எழுதின எழுத்து இது. இப்பத்தான் நம்பளுக்குத் தெரியுது, தம்பி வா ஒரு வாய் சாப்பிட்டிட்டுப் படுத்து துரங்கு ... ராச் சாப்பாட்டை ஒதுக்கப்படாது தம்பி !’


எனக்குப் பசியே இல்லே, அம்மா. நீங்க போய்ச் சாப் பிடுங்க!”


“வேடிக்கையான பிள்ளை நீ !’