பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25“சிந்தாமணி, அம்மா!’


கோசலை உட்கார்ந்தபடியே பின்னால் திருப்பினாள் வாம்மா. இன்னுமா துரங்கலை, சிந்தாமணி ‘ என்று கேட்டாள், எவர் சில்வர் கரண்டியைத் தரையில் வைத் தாள்.


‘இல்லிங்க சமையல் கட்டிலே நெய் கிண்ணத்தை வச்சிட்டு வந்திட்டீங்களே, அதைக் கொண்டு வந்து கொடுக்கத்தான் வந்தேன்.’


நெய்க் கிண்ணத்தை நீட்டினாள் சிந்தாமணி, கோசலை அம்மாள் அதைக் கையேந்தி வாங்கும் போது, ஏனோ கை நடுங்கியது, எப்படியோ கிண்ணமும் நெய்யும் தரைக்கு ஒடி விட்டன.


கோசலை அம்மாளின் கண்கள் கண்ணிரால் நிரம்பின,


என்னை மன்னிச்சிடுங்க...’


“பைத்தியக்கார பெண்ணம்மா நீ என் தப்புக்கு உன்னை மன்னிக்கனுமா ? நீ படிச்ச பெண்ணு. ரொம்ப அளந்து அளந்து பேசுவாய். நான் என்ன கண்டேன்.”


அழுகை சிரித்தது ! 密


கோசலை, சரி, போம்மா என்னமோ புதுசா ஒரு நினைப்பு வந்துச்சு... அதாகிலும் ஈடேறுமான்னு கடவுள் கிட்டே கேட்டேன். அவ்வளவுதான் ‘ என்றாள்.


சிந்தாமணிக்கு அந்தப் பேச்சின் சாறு எதுவும் பிடிபட வில்லை. அவள் அவ்விடத்தில் தங்க ஆசைப்பட்டவள் போலவும் காணப்பட்டாள். அதே சமயத்தில் அங்கிருந்து நகர்ந்து விடுவதே உசிதமென்றும் நினைத்தாள். அவள் மனம் அவளுக்கு தன் அறையின் வழியைக் காண்பித்தது, அவள் நடந்து சென்றதை இமை நோகப் பார்த்துக்