பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


கொண்டிருந்த கோசலை அம்மாளின் மனத்திரையில் ஒர் உருவம் தெரிந்தது. அது அவளுடைய தமையனாரின் மகள் மேகலையுடையது. சிந்தாமணி நெய்க் கிண்ணத்தை நீட்டிய போதும், அவள் மேகலையைத் தான் எண்ணிக் கொண்டாள்.


வழவழப்பு மிகுத்த தரைக்கு அங்கங்கே பொட்டிட்டாற் போன்று நெய்த் துளிகள் சிந்தியிருந்தன. மாமல்லன் அவற்றையே பார்த்துக் கொண்டான். தன்னுணர்வு வந்த தாய், தன் நினைவைப் பறிகொடுத்திருந்த தனயனைத் தட்டி, உணவு உட்கொள்ளுமாறு பணித்தாள்.


காலச் சிமிழிலிருந்து வினாடிகள் சிலவற்றை எடுத்துத் தெருவில் வீசினாள் கோசலை அம்மாள்.


மாமல்லன் கூடம் நீங்கிமாடிக்குச் சென்றான். தலைக்கு மேலே சிவப்புப் புள்ளி தெரிந்தது, தபால் வினியோகப் பிரிவு விமானம் அது. மணி பதினொன்று ! நிமிஷம் பதினைத்து. “மேகலை மேகலை!” என்ற பெயரை விடிந்த பிறகும் அவன் உதடுகள் உச்சரித்துக் கொண்டே யிருந்தன.


எழும்பொழுது : காலை இளம்பரிதிச் செல்வன் புவிச் செல்வியுடன் மணல் வீடு கட்டி விளையாடத் தொடங்கி விட்டான்.


மாமல்லன் துயில் நீங்கிக் கண் க ைள த் திறந்தான் அவனது முதற் பார்வையில் சிந்தாமணிதான் விழுந்தாள் . மாடியில் அப்பியிருந்த பனிமூட்டம் மெள்ள மெள்ள விடை பெற்றுக் கொண்டிருந்தது.


மாமல்லன் துண்டை எடுத்துக் கண்களைத் துடைத் தான். விழிகளை மூடி மூடித் திறந்தான். சிந்தாமணியின் உருவம் மாறி மாறித் தோன்றியது.