பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28படத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்தான் அவன். அவனுக்குத் தலைவலி மிஞ்சியதுதான் மிச்சம். அவள் தலைமறைவாகச் சென்றதுதான் பலன்.


காலைப் பலகாரம் முடிந்தது. வீட்டில் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. ஆகவே அலுவலகத்தில் இயந்திரங்களுக்கு மத்தியில் தன்னை அமைத்துக்கொண்டு பொழுதை நெட்டிப் பிடித்துத் தள்ள வேண்டுமென்று முடிவு கட்டினான் மாமல்லன். உடனேயே அம்முடிவை மாற்றினான். இங்கேயே இருந்து என் மேகலையைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால் என்ன ? ஆமாம், அதுவே சரி, என்ற ஒரு திருப்பமும் ஏற்பட்டது. என் மேகலை’ என்ற உரிமை பிறந்தபோது, அவன் உள்ளத்தே உண்டான இன்ப வேதனையை அவன் உணரத் தவறவில்லை. நீர் நிரம்பின. விழிவிரிப்பில் மேகலை தோற்றம் தந்தாள். அவள் மட்டும் தோன்றியிருந்தால் அவன் புளகிதம் அடைந்திருக்க மாட்டானா? அவளுடன் வேறு யாரோ ஒரு இளைஞனு மல்லவா தோன்றினான். யார் அவன் ? தெய்வமே, அவன் sirrff ?


உயிரும் உயிர்ப்புமாக இணைந்திருந்த இரண்டு ஜாதகங்களையும் வெட்டிப் பிரித்துத் திசை மாற்றிய பூரிப்புடன் அமைதி பெறாமல் தன்னுடைய ஜாதகக் குறிப்பையும் அல்லவா அவளுடைய குறிப்புக்களுடன் பிணைக்கப்பாடுபடுகிறான் அவன் யார் அவன் ?


கைகளைப் பிசைந்தான். கால் விரல்கள் தரையைக் கீறின. நெற்றிச் சுருக்கங்கள் எண்ணிக்கையில் மிகுந்தன. தலைக்கணம் அதிகரித்தது.


விடுமுறைக் கடிதத்தை எழுதி முடித்து, அதை அனுப்பி வைக்க யாராவது தென்படுகிறார்களா என்று பார்க்க வாசற்புறத்துக்கு வந்து படிக்கட்டில் மாமல்லன் நின்றான்.