பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


29


கடிதத்தை வாங்கிப் போக நண்பர்களில் யாரும் வரவில்லை ஆனால் அவனிடம் கடிதத்தைக் கொடுத்துச் செல்ல தபாற்காரர் வந்தார்.


மேல் விலாசத்தில் கண்ட எழுத்துக்கள் அவன் பெயரைச் சொல்லின. ஆனால் யார் எழுதியது என்று மட்டும் சொல்லவில்லை. திரையிட்ட உறையைக் கிழித்துக் கொண்டிருந்தபோது மாமல்லன்’ என்று அழைக்கும் குரல் கேட்டது. அவன் தன் போக்கில் கடிதத்தைப் பிரித்து, முன்னும் பின்னும் புரட்டினான். மேகலை’ என்ற பெயரை உச்சரித்தது வாய்,


Lp spji Liq. அவனது பெயர் கூப்பிடப்பட்டது. திரும்பினான். கண்களை உயர்த்திப் பார்த்தான். ஆடம்பரமே உருவாக ஒர் இளைஞன் நின்று கொண்டிருந் தான்.


நீங்கள்...?”


‘அடையாளம் தெரியவில்லையா, மாமல்லா ? நான் தான் திருமாறன். படத்தயாரிப்பாளர் ராமசேகருடைய மகன். மாமல்லனுடைய உயிர்த் தோழன். மூன்று வருஷம் நான் பர்மாவுக்குப் போயிருந்தேன். சென்ற மாதம்தான் திரும்பினேன்.” என்று விளக்கம்,கொடுத்தான் திருமாறன்,


‘ஒ. நினைவு வந்துவிட்டது ‘


அசட்டுச் சிரிப்புச் சிரிக்க முயன்றான் பெரிய இடத்துப் பிள்ளை’ ‘ஒடிகொலான்’ வாசனை ‘கம் மென்று வந்தது. வாசனைக்கும் இதனைப் பயன்படுத்துகிறார்கள். உடல் நலக் குறைவின் போதும் இது உபயோகப்படுகின்றதே ! அதே போல. இந்தப் பணக்காரப் பிள்ளையின் சிநேகமும் எனக்கு ஆபத்துக்கு உதவுமோ ? இல்லை தன்வரை மணம் பரப்பும் விளம்பரமாக இருந்து விட்டுத்தான் போய்