பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30


விடுவானோ இவன் ? என்று சிதறிய சந்தேகம் ஒன்று தலையை நீட்டியது.


கையிலிருந்த கடிதம் அவன் நெஞ்சத்தில் ஆர்வத்தைப் பாய்ச்சியது. பைக்குள் இருந்த லீவுக்கடிதம் அவனுடைய கடமை உணர்ச்சிக்குத் தூபமிட்டது. இப்படிப்பட்ட இரண்டுங்கெட்ட நிலையில் அவன் முன் அவனது நண்பன் நின்றான், திருமாறனின் பட்டுச் சட்டையில் வேர்வைத் துளிகள் சில, வழிந்து காய்த்து கொண்டிருந்தன.


“திருமாறன், வாருங்கள். உள்ளே போகலாமே’.


‘ரொம்பவும் நன்றி, மாமல்லா ! நான் இன்று இரவு அரியலூருக்குப் புறப்படுகிறேன். அடுத்த வாரம் உங்களைச் சந்திக்கும் போது, நீண்ட நேரம் நிம்மதியாகப் பேசலாம் வரட்டுமா?’ என்று சொல்லி விடை பெற்றான் திருமாறன்


மாமல்லன் தெருவில் கவனம் பதித்த போது, திருமாறன் பிளிமத் காரை ஒட்டிச் செல்வதைக் கண்டான். ‘நல்லபிள்ளை, காலேஜில் பார்த்த திருமாறனிடம் என்னென்ன புதுப்புது மாறுதல்களெல்லாம் ஏற்பட்டிருக் கின்றன. அவன் அதிருஷ்டக்காரன்தான் ....காரை நிழலில் பத்திரமாக நிறுத்தி விட்டு வந்தவனை உள்ளே கூட்டிப் போய் உட்கார வைத்துப் பேசியிருக்க வேண்டும்’ என்று நினைத்து தான் இழைத்த தவறுதலுக்காகக் குறை பட்டான்.


பாரதியாரின் பாடல் ஒன்றைக் காட்டியது இலக்கிய மனம். ‘பாட்டைத் திறப்பதற்குப் பண் ஒன்று இருக்கிறது அதேபோல இன்ப வீட்டைத் திறப்பதற்கும் பெண் ஒருத்தி வேண்டும்!” என்று சிந்தனை வழி கோலியது,