பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3}


மேகலையின் முதற் கடிதத்தை மாமல்லன் படித்து முடித்தான். அதே வினாடி தன்னை விட்டு மேகலை விலகிச் சென்று விட்டதாக மாத்திரம் அவனால் எண்ணி முடிவு கட்ட இயலவில்லை, மேகலை தன்னைச் சுற்றி மட்டுமல்லாமல், தன் இதயத்துள்ளேயும் வட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவே அவனுடைய உள்ளத்தின் உண்மை இயம்பியது, அவன் நம்பிக்கையில், கனவில், நினைவில் வாழ்பவன். அதுவே அவனுக்குச் சஞ்சீவி மருந்து, “ஆமாம், அப்படித்தான் செய்யப்போகிறேன் அவள் என் மேகலை ! என்ற வார்த்தைகள் அவனுடைய மனத்தாளில் எழுதப் பட்டன.