பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

今懇


‘திக்குத் தெரியாத காட்டில்-உனைத் தேடி தேடி இளைத்தேனே


தாய்க்குத் தான் பெற்ற குழந்தையைக் காணும்போது மார்பகத்தில் பால் சுரக்கிறது. உடன் பிறந்தவர்கள் ஒருவரை மற்றொருவர் சந்திக்கையில் நெஞ்சத்தில் பாசம் கொப்பளிக்கிறது. வேண்டியவர்களிடம் மனம் விட்டுப் பேச வாய்ப்பு உண்டானால், மனத்தில் அன்பு வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அம்மையப்பனை-அகிலாண்டேஸ் வரியை வணங்கும் சமயத்தில், அருள் பொங்குகின்றது. பக்தி பண்படுகிறது.


மனித மனங்களின் அடியில் உறங்கும் தெய்வ உணர்ச்சி கள் இவை, மனிதர்கள் இவற்றை வாழ வைக்கிறார்கள். இப்படிப்பட்ட தெய்வ உணர்ச்சிகள் மனிதர்களை வாழ வைக்கின்றன.


வாழ்க்கையின் பொது விதி இது.


கோசலை அ ம் ம | ள் சிந்தாமணியிடம் அன்பு காட்டினாள். கோசலை அம்மாளிடம் சிந்தாமணிக்கு பக்தி சுரந்தது. ஆதரவு இழந்த அனாதைப் பெண்ணுக்குத் தெய்வம் போலப் புகல் அளித்து வருபவள் அல்லவா அவள்


‘என்னமோ இந்த மட்டுக்குமாவது எனக்குத் தங்கு கிறிதுக்கு ஒரு நிழலைக் காட்டியதே தெய்வம், அதுவே என் பூஜா பலன் தான்! என்ற நன்றி உணர்ச்சி அடிக்கடி சிந்தாமணியின் இதயத்தில் தோன்றிக் கொண்டிருந்தது.