உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35



களிலே உன்னையே காணுகிறேன், காந்தம் மிகுந்து பேசும் உன் கயல் விழிகளையே நான் தரிசிக்கிறேன். இத்த ஒரு பாக்கியம் என்னுள் வரப்பிரசாதமாக அமைந்திருக்கையில் எனக்குப் புதிய கனவு எதற்கு ? புதிய உலகம் ஏன் ? புதுத் திருப்பந்தான் எதற்கு ?


娜兹 z 3 ASA SSASAS SSS LC S S S C AJS YCC BeeS0


கையெழுத்து இல்லை. பேனாவை எடுத்து அந்த இடத்தில் ஏதோ எழுதினாள் அவள். குலோத்துங்கன்” என்ற பெயர் உருவானது.


விழிக் கதவுகள் அடைபட்ட தருணத்தில், வாசற் கதவு கள் தட்டப்பட்ட சத்தம் கேட்டது.


எல்லாவற்றையும் அப்படியே திணித்து, கள்ளிப் பெட்டியை இருந்த இடத்தில் வைத்துத் திரும்பினாள் சிந்தாமணி. வழிந்த நீரை வழி விலக்கிவிட வேண்டுமென்று சித்தம் ஞாபகப்படுத்தவில்லை. அவள் வாசற் கதவுகளை நெருங்கித் திறந்தாள். கோசலை அம்மாள் திருநீறு விளங்கிய நெற்றியோடு காட்சியளித்தாள்,


“அழுதியாம்மா, சிந்தாமணி ?’ என்று கேட்டதற்குப் பிற்பாடுதான் சிந்தாமணிக்கு உணர்வு வந்தது. கண்ணிரைத் துடைத்துவிட்ட பிறகு, “இல்லிங்க, நான் அழலையே !” என்றாள்.


கோசலை அம்மாளுக்குச் சிரிப்பைத் தவிர வேறெதுவும் புலப்படவில்லை, நல்ல பொண்ணு இது இங்கே வந்த திலிருந்து வீடே புதுக்களையாத்தான் இருக்குது . . ஆனா மேகலை விஷயம் மாத்திரம் அப்படி நடந்திருக்காமல் இருந்திருந்தால், எவ்வளவோ சிலாக்கியமாயிருக்கும் இந்நேரம் மாமல்லனுக்கு முகூர்த்தத்துக்குத் தேதிகூடக் குறிச்சிருப்பேன் ! சிந்தாமணிக்கும் ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யவும் முனைஞ்சிருப்பான் தம்பி . ம்... !