இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
39
மன இரக்கம் காட்ட வேண்டாம்!...எங்களுக்கு நாங்களே உதாரணமாக அ ைம த் து விடுகிறோம் எனக்காக என்னுடைய மேகலை காத்துக் கொண்டிருப்பாள்...! சிந்தாமணி, என் அன்பு மேகலையை நான் காணா விட்டால், எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் !
மத்தியானம் எங்கள் ஆபீஸ் பக்கம் யாரோ ஒரு பைத்தியம், யாரோ ஒருத்தியின் உருவத்தைச் சுவரில் கரித்துன் டால் கிறுக்கிக்கொண்டிருந்தது என் கனவு சிதைந்தால், அவன் மாதிரியேதான் என் நிலையும் ஆகிவிடும் . நிலைமை சீர்கெடுவதற்குள், என் மேலையின் சொத்தை என் மேகலையிடமே சேர்ப்பித்து விடவேண்டியது என் கடமை. அப்போதுதான் ஆடும்.மயிலுக்கு, பாடும் அருவிக்கு,
இசைபரப்பும் வீணைக்குப் பொருள் இருக்க முடியும் :
சிந்தாமணி ஏதோ சொல்ல நினைத்து விழி வெள்ளத்தை விலக்கி, கண் பார்வையைப் பிரித்துப் பார்த்தபோது, அங்கே மாமல்லனைக் காணவில்லை.