உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரை இராசூழ


துரை. இராமு பதிப்பகம்


தாம்பரம்.


1—11—92.


பதிப்புரை


தன் எழுத்துப் பணிக்க அரசு பரிசுகள் முதலிட்ட பல பரிசுகள் பெற்றிருந்தாலும் மிக அடக்கமானவர் ; பல வார மாத இதழ்களோடு தொடர்பு கொண்டிருந்த போதிலும் எளிமையையே நாடுபவர் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரர் வாசகர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏமாற்றம் அளிக்காதவர் ; இனிய செட்டிநாட்டு வழக்கு மொழியில் தன் கருத்துக்களை எல்லோரும் ஏற்கும் வண்ணம் எழுதுபவர் ; இவர்தான் இந்நூலாசிரியர் திருமிகு பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள்.


‘அன்பு பெருகினால் சாதாரண செயல்களும் பெருமை மிக்கவைகளாக விளங்கும் , அன்பைப் போன்று பெருகி வளர்வது வேறொன்றும் இல்லை ; பெண்களின் அழகைக் காட்டிலும் அவர்களுடைய அன்பே காதலை வளர்க்கிறது; காதலுக்கு கண் இல்லை என்பது பொய் மட்டுமல்ல; மேன்மையான அதற்கு அவதுாறை விளைவிப்பதாகும் ; உண்மைக் காதலை நம் கண்களால் காண்பதில்லை; அதனை மனத்தால் காண்கிறோம். ‘ இன்னும் இவை போன்ற பலகருத்துக்களை மையமாக்கி அன்புத்தாய் மேகலை’ யை உருவாக்கியுள்ளார். இந்நூலில் ஆசிரியர் தன் உணர்வு களையும் பல இடங்களில குவியலாக்கியுள்ளார்.


இந்த நல்ல நூல் வாசகர்களிடையே நல் ஆதரவைப் பெறும் ; பெறவேண்டும் என விழைகிறேன். இத்தகைய ஒரு சிறந்த நூலை எங்கள் பதிப்பக வெளியீடாக வெளியிடு வதில் பெருமையடைகின்றேன்.


- அன்புள்ள


துரை. இரா.மு பதிப்பக உரிமையாளர்.