பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4.


பெரியவரைப் பார்த்தான் மாமல்லன், அவரையே இன்னும் கொஞ்சம் பொழுதுக்குப் பார்த்துக் கொண்டே விருக்கவேண்டும் போலிருந்தது பெரியவரின் பெயர் அறியான், ஆனால், முகம் அறிவான், இதயத்தையும் புரிந்து கொண்டான். நெஞ்சுக்கும் நேத்திரங்களுக்கும் ஊடாக உருத் தெரியாத் தொடர்பு இருக்கவேண்டும், உள்ளம் நெகிழ்ந்தால், கண்ணிர் கரை புரளும், முதியவரின் உருவில் திருவைக் கண்டான். அந்த திரு அவனுடைய தந்தை பாசம் கண்ணிர் உரு எடுத்தது.


‘தம்பி, உங்க கண்ணு இப்பிடி ஏன் கலங்குது ?”


ஒேண்னும் இல்லீங்க, ஐயா ! கரித் தூள் விழுந்திட்டுது . அவ்வளவு தான் !’


கண்ணிரைத் துடைத்த வண்ணம் அன்றைய மாலைப் பதிப்புச் செய்தித் தாளை மாமல்லன் புரட்டிக் கொண்டிருந் தான். ஆவடி காங்கிரஸ் விழாப் படங்கள் அச்சாகியிருந்தன.


சந்திப்பு நிலையத்தில் பிரிய வேண்டிய வண்டிக்குப் பிரியா விடை கொடுத்தது மணியோசை.


தூத்துக்குடியைக் குறி வைத்து ஓடியது எக்ஸ்பிரஸ் மாமல்லன் அரியலூரை எல்லை கட்டி அமர்ந்திருந்தான்


தொட்டால் ஒட்டிக் கொள்ளும் பசையும் மனமும் ஒன்று. அரியலூர் நினைவு அவனது உள்ளத்தில் ஒட்டியது. பசையின் பணியை ஏற்றது நினைவு, பின்னர் அது வழி மறைக்கும் நந்தியாக விரும்பவில்லை, ஒதுங்கியது. ஆனால் எஞ்சி நின்ற சிந்தனைக் கதிர் அரியலூர்ப் பாவையின் நினைவுக்குச் சிவப்பு கோடிட்டுக் காட்டியது. அவன் அவளானான், இதழ்க்கரையில் ‘மேகலை !’ என்ற அன்பின் கூப்பாடு கரை சேர்ந்தது.


முழு நிலவு பொழிப்புரை கூறும் எழில் நிறைவு அவளது வதனத்தில் குடி புகுந்தது. பிறை நில்வு கதை