பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4器


தார். ‘நான் அத்தான் கிட்டேயேதான் எப்பவும் இருப் பேன்.” என்று தீர்ப்புக் கூறி விட்டாள் மேகலை. அவர் மலைக் கோட்டை உச்சிப் பிள்ளையாரைத் தரிசனம் செய்த நாட்கள் பத்து .


இதயத் தளத்திலிருந்து சிலிர்த்தெழுந்த பெருமூச்சு மேகலையை அழைத்தது.


தேரடி முனங்கில் பெரியவர் இறங்கினார் காலையில் பத்து மணி சுமாருக்கு அவரைச் சந்திப்பதாகச் சொன்னான் மாமல்லன் ஜட்காவண்டியில் அவரிடம் சொன்ன கதையை நினைவூட்டினால், சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத் துண்டையும் நீட்டினான். கொஞ்ச தூரம் கடைத் தெரு வழியே மாட்டுச் சதங்கைகள் பண் பரப்பின. அம்பாள் காபி கம்பெனியில் இறங்கிக் குளித்து விட்டு மேகலையைப் பார்க்கலாம்”, என்று தீர்மானம் செய்தான் அவன்.


தேடிச் சென்ற இடத்தை நாடிய போது, அவனுக்கு வரவேற்பளிக்க அம்பாள் கம்பெனி உரிமையாளர்கள் காத் திருந்தார்கள். அவர்களோடு திருமண அழைப்பிதழ் ஒன்றும் தவம் கிடந்தது. கல்யாணப் பத்திரிகையில் அவன் கண்கள் பதிந்தன. முன்னமேயே இந்தப் பந்தம் நீக்கப்பட்டிருக்கக் கூடாதா ?. அல்லது, இப்போது என் உயிர்ப் பாரத்தைப் போக்கிவிட மாட்டாயா ?. தெய்வமே !’


அவனுடைய உயிர்ப்பு நின்று விட்டது போல உணர்ந் தான் மாமல்லன்.