பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5?


காதலெனும் தீவினிலே கண்டெடுத்த பெண்மணி ராதை யல்லவா என் மேகலை அவள் இல் ைலயென்றால், நான் எப்படி உயிர் தரிப்டேன் ? என்று மனம் குழப்பம் அடைந் தது. மேகலையின் இல்லம் நெருங்க நெருங்க அவனுக்குப் பயமும் நெருங்கிக் கொண்டிருந்தது. கை நழுவிப்போன மரகதக்கல் மீண்டும் கிடைக்காதா என்ற ஆதங்கத்துடனும் திரும்பவும் அது கிடைக்க வேண்டுமேயென்ற வேண்டுதலை யுடனும் தேடிப்பார்த்து அலையும் உடமைக்காரனின் நிலையில் இருந்தான் மாமல்லன்.


தேடிப் போன சீதேவி புள்ளிக் கோலம் இட்டுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு புள்ளியிலும் ஒவ்வொரு முத்து முத்தமிட்டது. குனிந்திருந்தவள் சரிந்து விழுந்த மார்புச் சேலையை எடுத்துப் போட்டவாறு நிமிர்ந்து எழுந்தாள். அதே சமயம், அத்தான்!” என்ற உறவுமுறை புதுபிக்கப்பட்டது.


மே க வை ‘’


பெருமூச்சும் கண்ணிரும் பெயரிட்டுக் கூப்பிட்டன.


‘நான் எழுதின லெட்டர் உங்களுக்குக் கிடைச்சுதுங் களா?’ என்று விம்மினாள் மேகலை.


‘உன் கடிதம் பட்டணத்திலேயே கிடைத்துவிட்டது. உன் கல்யாணப் பத்திரிகையை இங்கே வந்ததும் பார்த் தேன். ‘


மாமல்லன் சின்னப் பையன் ஆனான், தேம்பினான். *அழாதீங்க அத்தான் ! அழாதீங்க.” --


வாய்ச் சொற்கள் துயர் துடைக்குமென்ற நம்பிக்கை யில்லை அவளுக்கு, ஆதலால் பூ விரல் கொய்து, மாமல்லனின் விழி வெள்ளத்தைத் துடைத்தாள் மேகலை,