பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35


‘உண்மையாகவா, மேகலை ?” ஆலயமணி பதில் சொன்னதோ ?.


உணர்ச்சி சிறைப்படும் சமயத்தில் மனின் மனிதனாக நிலைத்து நிற்கவேண்டும். மேகலையின் மது சொட்டும் புது இதழ்களைக் கிள்ளிவிட ஒடிய வலது கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். இளைஞன். குளிர் காய்ச்சலுக்கு ஆளானவன் போலானான். உடல் குன்றியது தவறு செய்யவில்லையென்ற நியாய உணர்ச்சி அவன் கண்களைத் திறந்தபோது, குன்றிய உடல் நிமிர்ந்தது. உள்ளம் குது கலம் அடைந்தது. மேகலையைக் கூறு போட்டுச் சாப்பிட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பவனைப் போன்று அப்படி அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தான் மாமல்லன். இருவர் மூச்சின் இழைகளும் பின்னல் கோலாட்டம் விளையாடின. அப்போது, வாசலில் வந்து நின்ற கார் தன் வருகையைத் தெரிவிக்கத் தொடங்கியது. -


முதன் முதலில் மாமல்லன்தான் திரும்பினான். மரகதக் கல்லைத் திருடியவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொண்ட பொருளுக்கு உடையவன் திருடன் மீது ஆத்திரம் கொள்ளும் ரீதியில், மாமல்லன் அந்த உருவத்தைக் கனல் உதிர்க்கும் கண்களோடு பார்த் தான்


வந்தவன் திருமாறன்,


மாமல்லனை அப்போது அவ்விடத்தில் கண்டதில் அவனுக்கு மெத்த மகிழ்ச்சி. மனம் விட்டுச் சிரித்தான் சிரிப்பில்கூட பணத்தின் இதயம் பேச முடியுமோ ? மாமல்லனுக்கு சென்னைக்குக் காலையில்தான் அழைப்பு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தான் அவன்.


மாமல்லன் என்ன பதில் சொல்லுவான் ? இல்லை. அவனால் எப்படித்தான் பதிலளிக்க முடியும் ? ம்’ கொட்டித் தலையாட்டினான். --