பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58


மேகலை கண்ணிரைத் துடைத்துக் கொள்ளக்கூட கருத்தின்றி, சிந்தாமணியைப் பார்த்தாள். பார்த்து விட்டு, அதே சடுதியுடன் மாமல்லனையும் நோக்கலானாள்.


மாமல்லன் விழித்தான்.


அடுத்த இரண்டாவது கணத்தில், ‘தம்பி !’ என்று குரல் கொடுத்த வண்ணம் ரெயில் நண்பர் ரங்கரத்தினம் வந்தார். மாமல்லனைத் தனியிடத்துக்குக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று தெரிவித்த செய்தி இது, தம்பி, உங்க ஜாதகமும் எங்க முறைப் பெண் மேகலை ஜாதகமும் அற்புதமாய்ப் பொருந்தியிருக்காம் : கல்யாண விருந்துக்கு இந்தக் கிழவனை மறந்து விடக்கூடாது, தம்பி 1”


மேகலையின் கழுத்தில் அப்போதே மங்கல நாண் பூட்டி விட்டாற் போன்று ஒர் இன்ப உணர்வு மாமல்லனின் ரத்த நாளங்களில் பாய்ந்து பரவத் தொடங்கியது.