பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ‘வேலிக்கு முள்போடப் போக, அது


காவையே குத்தப் பார்க்குதா ?” பக்கம் 29 போன்ற பழங்காலப் பழமொழிகளை இடத்திற்கேற்ப கை:பாண்டிருக்கிறார்,


“பூப்படுக்கையில் குந்தியது போல’ பக்கம் 6 ‘அம்பு துளைத்துப் பாய்ந்தாற் போல’ பக்கம் 75


போன்ற நடைமு ை உவமைகளைக் கையாண்டு, நாவலைச் சிறப்பாக எழுதியுள்ளார்.


இலக்கியம் அறிந்த இலக்கியவாதி என்பதால் சிறந்த இலக்கியச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றார். ஆணிப் பொன்னால் சேய்த வண்ணச் சிறு தொட்டில் என்று பாடிய ஆழ்வார் பாசுரத்திற்குப் பொருள் விளக்கம் தருவது போல் நாவலாசிரியர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள்.


‘ஆனிப்பொன் என்று விளிக்கட்டுமா ?


மாற்றறிய பயன்படும் உயர்த்த ரகத் தங்கந்தான் ஆணிப் பொன்” பக்கம் 0ே என்று விளக்கம் கூறுகின்றார்.


கண்ணகியை முன் வைத்துப் புகழ்ந்த கோவலனின் வாய்மொழிகளை மால்ைலன் வாயிலாகக் கூற கைத்து, சிலப்பதிகாரக் கருத்துக்களை மக்கள் மனத்தில் பதிய வைக் கின்றார். தீக்குச்சியை உரசினால், என்ற கதையோட்டத் ல், அயோத்திராமனுக்குச் சொந்தமான சீதாப்பிராட்டி யார் தீக்குளிக்க நடத்திய மாண்பு மிக்க மகழ்ச்சியைச் சொல்லும் கதை அது’ என்று இராமாயணக் கருத்தை எழுதியுள்ளார்.


‘ஐயமெனும் பிசாசை விரட்ட வேண்டும்’ என்ற கருத்தினை அழகுற உணர்த்தியுள்ளார் ஆசிரியர் 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய மிகச்சிறந்த எழுத்தாளர் பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள் அ ைபுத்தாய் மேகலை மூலம், படிப்பவர் மனத்தில் பதியும்படி ஆழமான கருத்துக் களை நிலை நிறுத்தச் செய்துள்ளார். இந்நூ ல் பொழுது போக்கு நூலன்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நூல்


இவண் கோ. பெரியண்ணன் முத்தமிழ் இல்லம். தமிழாசிரியர் 9.A. மேக்மில்லன் குடிமிருப்பு அ. மே. நிலைப் பள்ளி நங்கைநல்லுரர். நங்கைநல்லூர்,


சேன்னை - 6.1 சென்னை - 6.1