பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


மனிதன். அவன் எண்ணினான், அவனால் என்ன முடிந்தது. அவன் கனவு கண்டான், அவனுக்குக் கனவை உண்டாக்க முடிந்தது. கண்ட கனவு சிதைந்து போன தையும் முன் ஒருமுறை அவன் உணர்ந்தான். உயிர்த் துடிப்பு இற்றுப் போனாற்போல உடல் முழுவதும் சூன்யம் பரவியது. சூன்யத்துள்ளே படர்ந்து பரவியிருக்கின்ற நிறைவைக் கணித்துக் கொள்ளத் தெரிந்த ஈசனையே வம்புக்கு இழுத்தான் மாமல்லன். தன்னுடைய ஜாதகமும் தன் மாமன் மகள் மேகலையின் ஜாதகமும் ஒன்று சேர வில்லை என்பதை அறிந்ததும், அவன் அடைந்த அதிர்ச்சி இவ்வளவு அவ்வளவல்ல. அன்று எழுதப்பட்ட எழுத்தை அழித்து எழுத ஆண்டவன் எப்படித் துணிவான் ? பார்க் கிறேன் !’ என்று சிந்தாமணியிடம் விடுத்த சவாலை மாமல்லன் இப்போது நினைவு கூர்ந்தான், பார்க்கிறேன்!” என்று கடைசியில் முத்தாய்ப்புப் பதித்த அந்த அழுத் தத்தை எ ன் னி ப் பார்த்தான். எண்ணியது நடக்க வில்லையே என்ற சஞ்சலத்தைவிட, எண்ணியது நடக்கத் தான் வேண்டும் என்கிற வைராக்கியமே மேலோங்கியது பெற்றவளுக்குக்கூட செய்தி தெரிவிக்காமல் அரியலூரில் வந்து கு தி த் த காரணத்தை மறக்கமாட்டான், மேகலையைத் தனியே சந்தித்து தன் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமென்று கொண்டிருந்த ஆவலையும் அவன் பசுமையாக்கினான்.


எல்லாம் இப்பொழுது பழைய சம்பவங்கள்.


பெரியவர் ரங்கரத்தினம் அவர்கள் மாமல்லனிடம் நல்ல செய்தியைத் தெரிவித்தார் அல்லவா ?- அந்தச் செய்தி மாமல்லனுக்கு இன்னமும் கனவில் கேட்டது போலவேதான் இருந்தது. கேட்ட தகவல் உண்மையென் பதை உறுதிப்படுத்திக் கொண்டு நிதானமாகத் தன்னுடைய பழங் கனவைப் பற்றியும் நொடிப் பொழுது அவன் சிந்திக் கலானான். கனவு சில அங்கங்களாகப் பிரிந்து, பின்னர்