பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6?


பல நனவுகளை நினைவுப்படுத்தியது. கனவு, உள்ளத்தை மட்டுமல்லாமல், உயிரையும் வாழ வைக்கிறதென்ற உண்மையையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. வினாத்தெரியாத காலந்தொட்டு மாமல்லனும் மேகலையும் ஒட்டியிருந்து தொட்டு மகிழ்ந்து ஆனந்தத்தை இட்டு நிரப்பிக் கொண்ட அடி நாட்களைச் சிந்திக்கத் தெம்பு கிடைத்தது. அறியாப் பருவம் தாண்டி அறியும் பருவம் அண்டியதும். ‘மாமல்லா, அதோயார் உன் பொண்டாட்டி!” என்று கேலி பேசிய உற்றார் உறவினர்களின் வேடிக்கைப் பேச்சுக்களையும் அவன் நினைத்துப் பார்க்க நேரம் இருந்தது. அன்பை வளர்க்கவும் வாழ்த்தவும் உரமிட்ட இரு வேறு அங்கங்கள் இவை காலச் சக்கரத்தின் சுழற்சியில் அன்பு காதலாக மாறியது, அவர்களது இதயங்களைப் பிணைத்தது காதலின் அமுத கீதத்துக்கு அடி நாதமாக இணைந்தது. காதல் வாழத் தொடங்கியது, அவர்களும் வாழத் தொடங்கினார்கள். ஏமாற்றத்தை முன்னுரை யாக்கிப் பயமுறுத்திய அதே காதற் கனவு இன்ப வெள்ளத்தை அவனுடைய விழிகள் இரண்டிலும் பாய்ச்சியது. அவன் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தான். “ஈஸ்வரா, இப்பொழுதாவது என் லட்சியத்தை ஈடேறச் செய்தாயே! என்று நெஞ்சம் நெகிழ்ந்தான். ‘நல்லவேளை நான் தப்பிப் பிழைத்தேன். நான் நினைத்ததைத்தான் தெய்வமும் நினைத்திருக்க வேண்டும். உண்மையிலேயே இது ஒர் அதிசயம்!-- எண்ணமென்ற இச்சுடர் இதயமெனும் அகல் விளக்கினின்றும் தெறித்துச் சிதறிய போது, மாமல்லனது உடல் பூராவிலும் பெருமிதமும் எக் காளமும் பிறந்தன. அவன் வாய் விட்டுச் சிரித்தான். சிரிப்பின் அலைகள் கூடிக் குலவிக் கலைந்தன. பூரண நிலவு தனக்கு மட்டுமே சொத்தம் என்று எண்ணி மூடிவிட்டு, இறுமாந்து பந்தம் சேர்த்துப் பொங்கிப் பூரித்துக் கடல் ரசிக்கும்போது, பெருமிதச் சிரிப்பு இழைந்தோடுவது உண்டல்லவா?- அப்படிப்பட்ட பாவனையில்தான்