பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கண்டெடுத்த


TttOBTBB BBBT TTYYOT S


இ ன் அடிக்கடி சிந்திக்கின்ற நடைமுறைச் சேதி தான் !


வாழ்க்கை என்பது சோதனை ; சோதனையென்றால், வாழ்க்கை. வாழ்க்கையின் சோதனையிலே, அல்லது சோதனையின் வாழ்க்கையிலேதான், மனிதன் விளையாடு கிறான் ; விளையாட்டுக் காட்டுகிறான் ...


மனிதனின் இவ் விளையாட்டிலேதான், அவனுக்கென அமைந்த - அமைக்கப்பட்ட, அல்லது, விதித்த - விதிக்கப் பட்ட இவ்வாழ்க்கை - இம்மண் வாழ்க்கை தவமாகவும், யோகமாகவும், கனவாகவும், நனவாகவும், போராட்ட மாகவும், சோகமாகவும். ஆனந்தமாகவும், ஏக்கமாகவும், ஏமாற்றமாகவும் உருக்கொண்டு - உருக்காட்ட, அதே வாழ்க்கை அவனுக்கு - அம்மனிதனுக்குச் சோதனை அனுபவம் என்கிற தாய்முவைப்பாலையும் புகட்ட நேர்கிறது.


விளைபலன் . அவன் எதார்த்தமான வாழ்க்கையை எதார்த்தமாகப் படித்துக் கொள்ளவும், படித்துக் கொடுக்கவும் நேருகிறது. மனிதனுக்குப் பிள்ளையார் சுழி’ போடுகின்ற அதேமண், அவனுக்கு முற்றுப் போடவும் தவறுவதில்லை ; தவறிவிடுவதும் இல்லைதான் !


இதுதான் மனிதன் கதை,


மனித வாழ்க்கையின் கதையும் இதுதான் ; இவ்வளவு தான்.


tVX!


மனித வாழ்க்கையின் இந்தக் கதைதான் இலக்கியம். இலக்கியம் ஒரு கலை.