பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7;


அமர்ந்திருந்தன. இதயங்களைச் சுமந்திருந்தவர்கள் மாமல்லன்-மேகலை,


நூலிழைகூட இடையீடு அமைக்கவில்லை அவர்கள். இருவர் வதனங்களும் ஒன்றையொன்று மாற்றி மாற்றிப் பார்த்தன. இனம் விளங்காத தாபமும், இனம் புரிந்த அச்சமும் மெளனத்தைத் துண்டாடத் துணிந்துவிட்டன.


“நாளை கழித்துக் கல்யாணம். கடைசியில் உன் முடிவு என்ன மேகலை ?’ என வினவினான் மாமல்லன்.


“அத்தான் என்னைக் கேள்வி கேட்காதீங்க, விடையை மட்டும் நீங்க சொல்லிப்பிடுங்க. அதன்படி நடக்கிறேன். உங்க முடிவு எப்படியா னாலும் சரி, அதை உடனே நிறை வேற்றுகிறேன். இது சத்தியம்.”


உறுதி சொன்னது போதாதென்று , அத்தானின் கை களைப் பிடித்துக் கையடித்தும் கொடுத்தாள் அன்புச் செல்வி மேகலை.


உடல் ரத்தம் முழுதும் உச்சியில் அணை கட்டப்பட்டு விட்டாற் போலிருந்தது. இது மாமல்லன் நிலை, நினைவு, நடப்பு. அன்றைக்கோ அவளைக் கண்டதும் அவன் விம்மினான், அவள் அவனுடைய கண்களைத் துடைத்து விட்டாள். இன்றைக்கோ, தெய்வ வாக்காக வாய் மொழியை உதிர்த்து அவனது பெருமூச்சைப் பெருஞ் சிரிப்பாக மாற்ற உத்தாரம் சொல்லியிருக்கிறாள். நான்த் தின் துணை கொண்டு மட்டும் பெண் பெருமை அடைந்து விடமாட்டாள். துணிச்சலும் உறுதியும் பெண்மைக்கு அணிகலன்களாக அமையவேண்டும் !


யாராவது வேற்று மனிதர்கள் வருகிறார்களாவென்று அடிக்கொரு முறை மாமல்லன் நாற்புறமும் பார்த்துக் கொண்டிருந்தான். பூந்தோட்டத்தில் பிறந்த மெல்லிய