பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74



“அப்படியானால், இன்றிரவே நீயும் ந - னு ம் சென்னைக்குப் புறப்பட்டு விடுவோம் !’


‘நல்லது, அத்தான் !”


“உன்னை நான் எங்கே சந்திப்பது ?” “எப்படியும் நான் ஸ்டேஷனுக்கு வந்துவிடுவேன். கவலைப்படாதீர்கள். அத்தான் !”


    • أنه ويج تقي عن 3 و بي : ة


காப்பித்துாள் கம்பெனியை மாமல்லன் அடைந்த சமயத்தில், அங்கிருந்த மேஜைக் கடிகாரம் மணி ஏழு என்று சொன்னது. மேகலையை அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு அவன் திரும்பியபொழுது, அவனுடைய நெஞ்சில் பாய்ந்திருந்த தைரியத்தையும் திட்டத்தையும் ஏதோ ஒர் உணர்வு அப்புறப்படுத்த முற்படுவது போன்ற தொரு நினைவு எழத் தொடங்கிவிட்டது அவனையும் அறியாமல் தாழ்வு மனப்பான்மையின் சாயல் படர்ந்து


பரவியது.


சமேகலை எங்கே நான் எங்கே மாமாவின் பணம் எங்கே ! நான் எங்கே - சைகோனில் விளைந்து வந்து கொண்டிருக்கின்ற வெள்ளைப் பணம் அவரது வெள்ளை மனசையே கறுப்பாக்கிவிட்டதே அவருடைய சொத்தைப் பற்றி அறிந்துதானே படக் கம்பெனி முதலாளி அவருடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள முனைந்திருக்கிறார் ... ஆனால் என்னுடைய இந்தப் புதியவழி... அது நல்லதா, கெட்டதா? என் சுயநலம் எனக்குச் சொல்லிக் கொடுக்கும் பதில் நல்லது’ என்பதுதான். மேகலைக்கும் என் செயல் சரி என்றுதான் பட்டிருக்கிறது. என் எண்ணப்படியேட் அவளும்தான் சிந்தித்திருக்கிறாளே ... மனிதர்களின் வாழ்க்கைத் தடாகத்திலே அமைந்திருக்கும் நீராழி அல்லவா, இந்த முதற் காதல் ?... எங்களுடைய முதற்