பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii)


{


அந்தக் கலையிலேதான் படைப்பிலக்கியம் வாழ்கிறது: உயிர் வாழ்கிறது.


தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றிலே, ஆராய்ச்சித்துறை மாணவ - மாணவியர்க்கு முனனம் ஆய்வுக்குறிப்பு நூலாகப் பரிந்துரை செய்யப்பட்ட கல்கி முதல் அகிலன் வரை” என்னும் என்னுடைய இலக்கியத் திறனாய்வு நூலில் நான் குறித்திருந்த விவரம் மீண்டும் மீண்டும் சிந்தனைக்கு விருத்தாகவே அமையும் ; அமைய வேண்டும்.


‘சமூக நலப் பணிமுறைகளிலே செயலாற்ற முனை கின்ற இலக்கியப் படைப்பாளர்கள், சமூக நலப் பண்பை பும், பண்பாட்டை யும் தலை:7ய கடமையாக மனத்தில் கொண்டு செயற்படுவதும் அவசியம் ஆகிறது. இந்நிலை, பக்குவமாகப் பேணிக் காக்கப்படுவதும் முக்கியம் ஆகிறது! அப்போதுதான், மனித மனங்கள் நெறிமுறையுடன் பேணிப் பாதுகாக்கப்படவும், அதன் நல்ல விளைவாகவும், நல்வினையாகவும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் நெறி முறையோடு திருத்தமும் சீர்திருத்தமும் பெறவும் வாய்ப்பு வசதி, உண்டாகும் ; உண்டாக்கப்படும் !...


இந்த எல்லைக் கோட்டிலே, என் மேகலை ஒர் ஆதரிசமாகவும் ஒரு நிதர்சனமாகவும் விளையாடுகிறாள் !


அவளுடைய அழகான, அன்பான, பாசமான, நேசமான விளையாட்டிலேதான் அவள் கதை.அவளுடைய வாழ்க்கைக் கதை பெண்மைக்கு ஒர் உதாரணமாக மட்டு மல்லாமல், ஒர் உத்தாரணமாகவும் திகழ்கின்றாள் !


க.அன்புத்தாய் மேகலை’ என்னும் இந்நாவல் என்னுடைய இலட்சியப் படைப்புக்களிலே தனி இடம் பெறத் தக்கது ஆகும்! அடிநாளிலே, நான் உமா’ இதழில்