பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 :


அவன் மறப்பானா ? கால விளக்கின் நல்லாசியும், அட்சதை மணிகளின் வாழ்த் தொலியும் இன்னமும் காது களில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.


என் கனவு பலித்துவிட்டது. ஆஹா, என் கனவு பலித்து விட்டது. ஆமாம், என் கனவு பலித்து விட்டது...”


இவ்வாறு அவன் எண்ணற்ற தடவைகள் எண்ண மிட்டான். இதயக் களிப்பின் நிதைவுடன் அருகிருந்த துணையை நோக்கினான். எழிற் கன்னியின் கள்ள விழிப் பார்வையில் போதை தெரிந்தது, அவனது விழிகள் தட்டாமாலை சுற்றின. அந்த நோக்கில் போதமும் இருந்தது. அவனுடைய முகத்தில் பிரதிபலிக்கப்பட்ட அறிவு பிரகாசித்தது.


மனமாலைகள் இரண்டும் தனித்தனியே உள்வீட்டுச் சுவர் ஆணிகளில் ஒய்வு பெற்றன.


கோசலை அம்மாளின் கண்களில் ஆனந்தக் கண்ணிர் இருந்தது. அவளுடைய அண்ணி மரகதவல்லி அம்மை கையில் ஏந்திய வெற்றிலைத் தட்டுடன் எதிரில் நின்று கொண்டிருந்தாள். ஐந்தாறு நிமிஷ நேரமாக நின்றதால், கால் கடுத்தது, வலது கைத் தட்டும் சுமையாக அமைந்தது. ஆகவே தாம்பூலத்தைக் கைமாற்றினாள். அப்போது தங்கக் கொலுசுகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டன. அதன் விளைவால், மெல்லிய ஒலி மெள்ளப் புறப்படடு நின்றது.


கோசலை தலையை உயர்த்தினாள், விழி நீருக்கு வழிவிட்டாள். பெருமூச்சு வெளி வந்தது. மலர்ச்சிரிப்பு முகங்காட்டிற்று. கண்ணிர் கைவிரல்களுள் பதுங்கியது. கூடத்தில் விரித்திருந்த ரங்கூன் பாயில் மூன்று சொட்டுத் துளிகள் சிதறிக் கிடந்தன.


அ-6