பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83


மரகதவல்லி அறிமுகப்படுத்திய சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டது கோசலை அம்மாளின் புன்னகை உதடுகள் அனுமதித்த இடைவெளியில் வெற்றிலைக் காவி படிந்த பற்கள் தெரிந்தன.


அதே சமயத்தில் மாடிப்படிகளின் வழியே இளம் ஜோடிச் சிரிப்பின் அலைகள் மி த ந் து வந்து கொண்டிருந்தன,


சொல்லி வைத்தாற் போல அண்ணியும் நாத்தியும் தலைகளை உயர்த்திப் பார்த்தார்கள், பார்த்த சடுதி யிலேயே தலைகள் தாழ்த்து விடலாயின. இப்போது உதட்டுக் கரைகளிலே நமட்டுப் புன்முறுவல் பொன் ஒளி பரப்பியது.


வெத்திலை போடுங்க, சம்பந்தி ’’


என்ன அண்ணி, புதுசா சொந்தம் கொண்டாடுறீங்க?”


‘உள்ள சொந்தம்தானே கோசலை ?”


ஆமா, உள்ளதைச் சொல்லித்தான் தெரியப்படுத் தணுமாக்கும் ?”


‘உங்க அண்ணன் அப்படிப்பட்ட நிலைக்குத்தானே நம்பளைக் கொண்டாரயிருந்தாங்க ?”


‘வாஸ்தவந்தான் அண்ணி. என்னமோ மலைக் கோட்டைப் பிள்ளையார் கடாட்சத்தினால் தான் எல்லாமே நல்லபடியாக முடிஞ்சிருக்குது. ஆதி காலந் தொட்டு நாம் பேசிக்கிடுவோமே, எங்க மாமல்லனுக்குத் தான், உங்க மேகலைன் னு, அப்படியே நடத்திட்டுது. கடவுள் துணையாலே அண்ணன் மனசு மாறுறதுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. உங்களை ந - ன் மறக்க முடியாதுங்க அண்ணி ‘