பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


அவருக்குப் புதிய யோசனை ஒன்றை அருளினான் எல்லாம் வல்லவன் தட்சணமே தங்கையிடம் ஒடி வந்தார். அவருடைய மதிப்பும் கெளரவமும் கோசலையின் தீர்ப்பில் இருப்பதை உணர்ந்தறிந்தவர் இல்லையா அவர்? :மேகயை நீ தான் கோசலை உன் மருமகளாக ஏற்றுக்க வேணும்” என்று கண்ணிர் எச்சரிக்கையுடன் வே ைடினார். நடந்ததை ஆதியோ-ந்தமாகக் கூறினார். மன்னிப்பும் கேட்டார்.


கோசலை அம்மாளுக்குப் பெரும் அதிர்ச்சியாகப் போய் விட்டது. மைந்தனின் கனவுக்கு முழு வடிவம் கொடுக்க வேண்டுமென்னும் ஒரே நினைவு அவளுடைய வைராக் கியத்தைக் கூட இருந்த இடம் தெரியாமல் மறைத்து விட்டது மனக்கோலம் பூண்ட ஒரே மகனைக் கண் பூத்துப் போகும் பரியந்தம் பார்த்துக் கொண்டேயிருந் தாள் பெற்ற அன்னை.


சோமசுந்தரம், தங்கச்சி : என்று நினைவுத் தத்தியைச் சுண்டி விட்டார்.


நின்று நிலைத்து விட்ட உண்மை அவருக்குப் 3 கொடுத்த பாடம் மனச்சாட்சியின் குரலாகும் ! ஒம’ என்னும் இரட்டை எழுத்துக்களுக்குள் முடங்கினார் அவர்.


கோசலை அம்மாள் ஏறிட்டுப் பார்த்தாள், கனவு கண்டு விழிப்பது போலவேயிருந்தது அவளுக்கு போய்ப் படுத்துத் துரங்குங்க, அண்ணாச்சி, உடம்பு அலுப்பு அப்பத்தான் தீரும்’ என்றாள் அவள். பிற்பகல்.


தொடர்ந்த பேச்சுக்கு இணைப்புக் கொடுக்க விரும்ப வில்லை. அவள் என்பதையும் அவர் யூகித்தார். சம்’ என்று சூள் கொட்டி உயிர்த்தவாறு நடையைக் கடந்த போது தபால்காரர் வாசலில் காத்திருந்தார். - -