பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


89


“அத்தானுக்குப் பால் கொடுத்தாங்களா ?” *அண்ணாவுக்குக் கொடுக்காமல் இருப்போமா ?”


சிந்தாமணியின் இதயத்திலிருந்து வெளியான ‘அண்ணா என்ற சொல் மேகலையின் உடம்பில் புல்லரிப்பை ஏற்படுத்தியது, முதன் முதலாக அவள் சிந்தாமணியை தன் அத்தையுடன் கன் டதையும் அதே சூட்டுடன் தன் அத்தானையும் பார்த்ததையும் நினைத்துப் பார்த்தாள். அன்று சிந்தாமணியின் மீது அவளுக்கு இனம் தெரியாத பொறாமை உணர்ச்சி பிறந்தது. இன்று அந்த உணர்ச்சியில் சொல்லில் கட்டுப்படாத பாசம் கிளர்ந் தெழுந்தது.


மேகலை பால் அருந்தினாள், “ஆமா, இதோட சரியா ? இல்லே, ராத்திரிச் சாப்பாடு கிடைக்குமா ?” என்று கேட்டாள்.


“சாப்பாடு உண்டு...உண்டு அண்ணனும் நீங்களும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டாகணுமாக்கும் ‘


‘அப்படியா ? ...ஒ ண் ண | வ |ா உ ட் கா ர் ந் து சாப்பிடனும் ?”


“ஆமா....ஆமா !”


மேகலை ம்...’


“ஆனா, ஒன்னு...!”


“என்ன சிந்தாமணி ‘


- ‘நீங்க நினைக்கிற மாதிரி இப்ப நடக்காது. அண்ணா சாப்பிட்ட மிச்சம் இன்னிக்கு உங்களுக்கு அவ்வளவு


லகுவிலே கிடைக்காதாக்கும். அந்த பாக்யம் கிடைக்க இன்னும் ஏழெட்டு நாள் பொறுமையாயிருக்க வேணும்...!"