பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 101 இைதில் ஒப்புக்கொள்ள என்ன இருக்கிறது? எந்தப் பெண்ணும் தன் காதலை வெளியிட மாட்டாள்; பெண்மை அதற்கு இடம் கொடுக்காது- அதல்ைதான் அவள் மெளனமாக இருக்கிருள்; இது ஒன்றே போதும்; எனக்கு-கான்தான் அவள் காதலன்; நான்தான் அவள் கணவன்; நான்தான் அவள் துணைவன்; கான்தான் அவளுக்கு எல்லாம். வேண்டு மால்ை பார், அதற்கு அத்தாட்சி” என்று தன் சட்டைப் பையிலிருந்த என் கணவரின் கடிதத்தை எடுத்துக் காட்டினர் அவர். அதைக் கண்டதும் எனக்குப் பகீர் என்றது. அக்தரங்கமாக அவள் கணவனல் காக்கப்படும் கற்பின் பெட்டகம் அன்ருே, பெண்? அவ8ள அடகுப் பொருளாகவும் கலியாண வீட்டுச் சந்தனப் பேலாவாக வும் ஆக்குவதுதான் சீர்திருத்தமா? அதுதான் புதுமையா? புரட்சியா? அதுதான் அன்பா? அது தான் வாழ்க்கையா? ஐயோ இதுதான் விபரீதம்இந்த விபரீதத்துக்கு, இந்த வெட்கக் கேட்டிற்கு நேர்மையான சாயப்பூச்சு என்ன வேண்டிக் கிடக் கிறது; அட கடவுளே! அந்தக் கடிதம்தான் அன்பின் சின்னமாமே, ஆசாரத்தின் அடித்தளமாமே?-அன்பு என்பது இன்னதென்று தெரியாதா? உலகம் மாயை என்பதுபோல் அன்பும அவர்களுக்கு மாயையா? மனப் பிரமையா? உண்மையில் அன்பை அன்பாக மதித்திருந்தால் இப்படியும் ஒரு கடிதம் எழுத அவருடைய மனம் துணிந்திருக்குமா? சீ! என்ன மனிதர்கள், என்ன வாழ்க்கை! அ.-7