பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 103 எனக்கேற்ற இடமா இது!’ என்று கருவின, பூரீமான் லங்கேஸ்வரன். என்னை யுமா நீ ஏமாற்றி விட்டாய் இரு இரு!” என்று கருவினர் என் அத்தான். இைருக்கிறேன். இருக்கிறேன்!” என்றேன் நான். அந்த அகம்பாவிகளிடம் உங்களுக்கென்னம்மா பேச்சு. உள்ளே வாங்க, படி ச் ச வங்க ளாம், படிச்சவங்க!' என்று காறி உமிழ்ந்தான் சாம்பு.

இத்துடனுவது அவர்கள் விடுவார்களோ, விட மாட்டார்களோ என்று தெரியவில்லையே எனக்கு” என்று இடுப்பைப் பிடித்துக் கொண்டே கான் மெது வாக மாடிப்படிகளில் காலை வைத்தேன்.
ஐயோ!' என்ற சாம்புவின் அலறல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.

சாம்புவின் நெற்றியிலிருந்து ரத்தம் ஆருகப் பெருகி ஓடிக்கொண்டிருந்தது. ஐையோ, சாம்பு!” என்று கத்திக் கொண்டே கான் அவனே நோக்கி ஓடினேன்.