பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


108 அன்பு அலறுகிறது மாவரைக்கும் உத்தியோகம்’ ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அதையே புருஷ லகூடிண"மாகக் கருதி ஏற்றுக்கொண்ட அவனுக்கு மனநிறைவும் கிம்மதியுங் கூடக் கிடைத்தது என்ருல் பார்த்துக் கொள்ளுங் களேன்! இந்த உத்தியோகத்தில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்த அவன் இருபதாவது வயதில் பிரதம சமையற்காரன்’ என்ற பெறற்கரிய பதவியைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வதற்குரியவனுன்ை. அந்த அந்தஸ்தைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தஸ்து மிக்க எங்கள் ஊர்ப் பெரிய மனிதர்கள் அனைவரும் தங்கள் வீட்டு கலியாணங்களுக்கு அவனையே கைதேர்ந்த சமையற்காரன் என்று தேர்ந் தெடுத்தார்கள். என் கணவரும் என்னுடைய கலியாணத்தின்போது அவனையே தேர்ந்தெடுத்தார். இந்தச் சமயத்தில்தான் தன்னையும் அறியாமல் அந்தஸ்து என்னும் மாயை வந்து தன்னைப் பற்று வதையும், அந்த மாயை தன் அன்புக்குகந்த தோழர் களிடமிருந்து தன்னைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பிரிப்பதையும் அவன் உணர்ந்தானும்; உணர்ந்ததும், ஐயோ! கடவுளின் குழந்தையாகப் பிறந்த கான், சைத்தானின் குழந்தையாக மாறிவிடுவேன் போலிருக் கிறதே?’ என்று அவன் பயந்தானும். அதற்கேற்ருற் போல் அவனுடைய சமையலில் தமது காக்கைப் பறி கொடுத்துவிட்ட என் கணவர், அவனை எங்கள் வீட்டு நிரந்தரச் சமையற்காரணுக்கிக்கொள்ள நினைக்கவே, அதுதான் சமயமென்று அவன் பிரதம சமையற் காரன்’ பதவியை ராஜினமாச் செய்துவிட்டுச்