உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பெண்மையில் கண்ட உண்மை! ரயில் கிலயம் உயிர்பெற்று, உணர்வு பெற்று ஜீவகளையோடு விம்மிக் கொண்டிருந்தது. மணி ஒன்பது முப்பத்தைந்து. இரண்டாம் வகுப்பு வண்டியில் ஓர் உத்தியோகஸ் தரின் குடும்பமும் கானும் தவிர வேறு யாருமில்லை. வண்டி புறப்படுவதற்கு முதல் மணி அடித்தது; பிளாட்பாரத்தில் ஜன்னலருகே கின்று கொண்டிருந்த சாம்பு என்னிடம் விடை பெற்றுக் கொண்டு மூன்ரும் வகுப்புப் பெட்டிக்குச் சென்றுவிட்டான். கான் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது மணியும் அடித்தது. கூக்கூ..." என்று குரலெடுத்துக் கூவியது என்ஜின். அதைத் தொடர்ந்து கார்டின் விசில் விர்ர்...விர்ர். என்று அலறிற்று. பச்சை விளக்கின் பசுமையான ஒளி லாகவமாக ஆடி ஆடிப் படர்ந்தது. உள்ளத்தில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி சொந்த வருக்குப் போகிறேன் என்பதலைாt இல்லை; இல்லை.