பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அன்பு அலறுகிறது ரயில் பிரயாணம் என்ருலே எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்!-அத்தகைய குழந்தை உள்ளம் என்னுடைய உள்ளம்; அதை எண்ணி எனக்கு கானே சிரித்துக் கொண்டேன். புஸ்!’ என்ற பெருமூச்சுடன் ரயில் நகர ஆரம்பித்தது. அவ்வளவுதான்; என் சந்தோஷமெல் லாம் கூடினமே குலைந்து குடியோடிப் போய்விட்டது. காரணம் ரீமான் லங்கேஸ்வரன் தலை தெறிக்க ஓடி வந்து என் பெட்டியில் வந்து ஏறிக்கொண்டதுதான். அட கடவுளே! கால் தவறிக் கீழே விழுந்து ரயில் சக்கரத்தில் அரைபட்டுச் சாகக் கூடாதா, இந்தப் பாவி?’ என்று எண்ணியது என் மனம்.

  • சீ, இதென்ன ராகூடிஸ்த்தனம்' என்று என்னை கானே கடிந்துகொண்டேன்.

பெட்டிக்குள் வந்து கின்ற லங்கேஸ்வரனே கைக் குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டே எனக்கு அருகே இருந்த இடத்தில் ஏதும் அறியாதவர் போல் அமர்ந்தார். கானுே ஜன்னல் பக்கமாக முகத் தைத் திருப்பிக் கொண்டேன். கொஞ்சங் கொஞ்சமாக கான் வசித்த ஊர் என்னிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தது. இருள் கவிழ்ந்த வாழ்வுப் பாதையில் எதிர்ப்படப் போகும் அபாயங்களே அறிவுறுத்துவது போல் சிவப்பு விளக்குகள் அடிக்கடி மின் னிக்கொண் டிருந்தன. லொடக், லொடக் என்ற தாள லயத்தோடு இருளைக் கிழித்து வழியமைத்து முன்னேறிக்கொண் டிருந்தது ரயில்,