இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விந்தன் 137 பரவாயில்லை என்று இரண்டாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்ய ஆரம்பித்துவிட்டேன், அம்மா!' என்ருன் அவன். மறுநாள் காலை; என் கணவரின் திருக்கரத்தைப் பற்றியவாறு நுழைந்த அந்த வீட்டிற்குள் அவரும் இல்லாமல் அவருடைய திருக்கரமும் இல்லாமல் உள்ளே நுழைந்தேன். என்னென்ன பெருமைகளோடு இந்த வீட்டில் நுழைந்தேன்? என்னென்ன சிறுமைகளோடு இந்த வீட்டில் நுழைகிறேன்? ஆரத்தி எடுத்து அரவணைத்து வாழ்த்துக் கூறி என் இன வரவேற்ருள் அத்தை! வாம்மா, வா!' என்று வாய் கிறைய அழைத்து மனம் கிறைய வாழ்த்தினர் மாமா! அக்கா!' என்று ஆர்வத்தோடு வந்து என் கால் களைக் கட்டிக் கொண்டாள் குழந்தை லகூடிமி. இன்று... கணவனைப் பிரியாமல் பிரிந்து, கால்களின் பிடி யில் சிக்காமல் சிக்கி, சீரழியாமல் சீரழிந்து வரும் என்னை வாழ்த்த வேண்டாம் அத்தை; வரவேற்க வேண்டாம் அத்தை முகத்தைச் சுளிக்காமல் இருந்