பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 அன்பு அலறுகிறது வேண்டுமானலும் எப்பொழுது வேண்டுமானலும் கைவிடுவார்கள்!”

  • இதில் வேடிக்கை என்னவென்ருல் அவர் என்னைக் கைவிடவில்லை, கான்தான் அவரைக் கைவிட்டேன்!”

சரி, முந்திக்கொண்டுவிட்டிர்கள் போலிருக் கிறது!”

இத்தனைக்கும் கான் யார், தெரியுமா? இன்னுெரு வருடைய மனைவி!'
அடி சக்கை, காதலில் புதுமையும் புரட்சியும் வேண்டுமானல் இன்ைெருவருடைய மனைவியைத் தான் காதலிக்க வேண்டும் என்று அந்த எழுத்தாளர் தீர்மானித்துவிட்டார் போலிருக்கிறது!”
அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறீர்கள்? கார் விபத்தில் என் கணவர் தம்முடைய ஆண்மையை இழந்தாலும் இழந்தார், என்னுடைய பெண்மையைத் தன்னுடைய ஆண்மைக்குப் பலி கொள்ளத் துணிந்து விட்டார் அந்த எழுத்தாளர்'

அதைவிடப் புதுமை இது, அதைவிடப் புரட்சி இது!’

அது மட்டுமல்ல; பிறன்மனை நோக்காத பேராண்மை சான்ருேர்க்கு அறனன்ருே ஆன்ற ஒழுக்கு என்று கம் வள்ளுவர்பெருமான் சொன்னுரல்லவா, அந்தப் பேராண்மை, பிறன்மனை நோக்குதலே' என்று அவர் எண்ணிவிட்டார்!’

அட கடவுளே, எண்ணத்தில் ஏற்பட்ட புரட்சி யும் புதுமையும் எழுத்திலும் ஏற்பட்டுவிட்டதாக்கும்'